Show all

பெண்களின் பாதுகாப்பில் சென்னை முதலிடத்தில் உள்ளதாக நடுவண் குற்ற ஆவணக் காப்பகம் தகவல்

13,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நடுவண் குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியதாவது:

இந்தியாவின் ஆறு பெரு நகரங்களில் பெண்களின் பாதுகாப்பில் சென்னை முதலிடத்தில் உள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சென்னையில் தான் குறைவு. 43 லட்சம் பெண்கள் வசிக்கும் சென்னையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 544ஆக பதிவாகி உள்ளது. சென்னையில் வசிக்கும் ஒரு லட்சம் பெண்களில் 15பேர் தான் பாதிக்கப்படுவதாக புள்ளிவிவரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சென்னையில் மட்டுமல்ல ஒட்டு மொத்த தமிழகத்திலும் ஒன்றும் நடக்கவில்லை என்கிற தகவல்தாம் உண்மையான மகிழ்ச்சியைத் தருவதாக இருக்க முடியும்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கையில் டெல்லி முதலிடம் பெற்று உள்ளது. 75.8 லட்சம் பெண்கள் வசிக்கும் டெல்லியில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. டெல்லியில் 1 லட்சம் பெண்களில் 182 பர் பாதிக்கப்படுவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. பாதுகாப்பான நகரம் பட்டியல் சென்னை முதலிடத்திலும், மும்பை இரண்டாவது இடத்திலும் உள்ளது. இதே போன்று கொல்கத்தா 3வது இடத்திலும் பெங்களூரு 5வது இடத்திலும் உள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மோசமான நகராமாக டெல்லி உள்ளதாக குற்ற ஆவண காப்பக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,650

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.