Show all

ஆரியர்களின் தொல்கதைத் தலைவர் கிருஷ்ணரின் பதினொன்றாவது அவதாரம்தான் மோடியாம்

14,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ராஜஸ்தான் பாஜக சட்டமன்ற உறுப்பினர் அகுஜா, பரபரப்பிற்கு பஞ்சமில்லாத கருத்துகளுக்குச் சொந்தக்காரர். பசுக்களை இறைச்சிக்காக வெட்டுகிறவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்று இவர் சமீபத்தில் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது

தற்போது இவரின் அடுத்த அதிரடி- ஆரியர்களின் தொல்கதை கதைத் தலைவர் கிருஷ்ணரின் பதினொன்றாவது அவதாரம்தான் நரேந்திர மோடி என்கிற கயிறு திரிப்புதான்.

தலைமை அமைச்சர் மோடி, கிருஷ்ணரின் அவதாரம் என்றும், எதிர்வரும், பாரளுமன்றத் தேர்தலுக்குப் பிறகும், 10 ஆண்டுகளுக்கும் மேலாக, மோடி அவர்களின் ஆட்சியே தொடரும் என்றும் ராஜஸ்தான் பாஜக சட்டமன்ற உறுப்பினர் கூறியுள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைமை அமைச்சர் மோடி, கிருஷ்ணரின் அவதாரம்; கடவுள். அதனாலேயே, அவர் மற்றவர்களிடமிருந்து தனித்து தெரிகின்றார். மோடியின் எண்ணங்கள் மற்றும் செயல்பாடுகள், நாட்டுமக்களுக்கு தற்போது கசப்புணர்வை தந்தாலும், எதிர்காலத்தில், நாடும், நாட்டு மக்களும் சிறந்த பலனை அறுவடை செய்யப்போகிறார்கள்.

மோடியின் இத்தகைய தொலைநோக்கு நல்லெண்ணம் கொண்ட பார்வையால், 10 ஆண்டுகளுக்கும் மேலாக, நல்லாட்சியை தொடர்வார்.

மோடி, காகிதப் பணமதிப்பு நீக்கம், சரக்குசேவைவரி, ஜன் தன் திட்டம் உள்ளிட்ட வரலாற்று சிறப்புமிக்க பல்வேறு திட்டங்களால் மக்களின் மனதில் நீங்காவண்ணம் இடம்பிடித்துள்ளார் என்று அகுஜா அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,651

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.