Show all

மனைவிக்கு வழிபாடு! கோயில் கட்டியுள்ள ஏழை உழவுக்கூலி

13,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் எல்லந்தூர் வட்டத்தில் உள்ள கிருஷ்ணபுரா கிராமத்தை சேர்ந்தவர் ராஜூ என்ற ராஜசாமி.வேளாண் கூலி தொழிலாளி. இவரது மனைவி ராஜம்மா.

ராஜூக்கு சொந்தமாக 3 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் தனது மனைவி ராஜம்மாவுக்கு கோவில் கட்டினார். இந்தக் கோவிலில் மூல விக்ரகமாக ராஜம்மா உள்ளார்.

சிவன், நவக்கிரகங்கள், சனீஸ்வரர், சித்தப்பாஜி ஆகியோரது சிலைகளும் உள்ளன. இந்தக்கோவில் கட்டியது குறித்து ராஜூ கூறியதாவது:

நான் எனது சகோதரி மகளான ராஜம்மாவை காதலித்து மணந்தேன். எங்களது காதலுக்கு எனது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். என்றாலும் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டோம். எனது சகோதரியையும், அவரது குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் ராஜம்மாவை மணந்து கொண்டேன்.

கோவில் கட்ட உறவினர்களும். கிராம மக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். நான் அவர்களது எதிர்ப்பை மீறி 2 ஆண்டுகள் சிரமப்பட்டு இந்தக்கோவிலை கட்டினேன். 

12 ஆண்டுகளாக எனது மனைவி சிலைக்கு பூசை செய்து வருகிறேன். இந்தக்கோவிலை பக்கத்து கிராமங்களில் இருந்து வந்தும் மக்கள் பார்த்து செல்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

 -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,709

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.