Show all

வரலாறு காணா உயர்வு! உச்சஅறங்கூற்று மன்றத்தில், நடுவண் அரசு தொடர்பான வழக்குகள்

14,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உச்ச அறங்கூற்று மன்றத்தில், நடுவண் அரசு தொடர்பான வழக்குகள் முந்தைய ஆண்டுகளை ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு வரலாறு காண வகையில் உயர்ந்து இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

நடுவண் அரசின் கொள்கைகளை முன்வைத்து உச்ச அறங்கூற்று மன்றத்தில், பல்வேறு தரப்பினர் அவ்வப்போது வழக்குகள் பதிவு செய்கின்றனர். அப்படி நடுவண் அரசையும் ஒரு தரப்பாக சேர்த்து பதிகை செய்யப்பட்ட வழக்குகள், முந்தைய ஆண்டுகளை ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு அதிகரித்து இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. அந்தவகையில் கடந்த ஆண்டு 4,229 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்த ஆண்டிலும் அதற்குள்ளாகவே, 859 வழக்குகள் பதியப்பட்டு உள்ளன.

காகித பணமதிப்பு நீக்கம், சரக்கு-சேவைவரி போன்ற அரசின் எடுத்தேன் கவிழ்த்தேன் என்கிற மக்கள் விரோத கொள்கைகளே இத்தகைய வழக்கு அதிகரிப்புக்கு காரணம் என சட்ட அமைச்சக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இவ்வாறு நடுவண் அரசு தொடர்புடைய வழக்குகள் ஒருபுறம் அதிகரித்து வரும் நிலையில், மறுபுறம் இந்த வழக்குகளுக்கு அரசு சார்பில் அணியமாகும் சட்ட வல்லுனர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.  

எடுத்தேன் கவிழ்த்தேன் எனும் நடுவண் அரசின் கொள்கை முடிவுகளுக்கு, சட்ட ரீதியான சப்பைக் கட்டுகளுக்கு சட்ட வல்லுனர்களே இன்னும் தயாராக வில்லையென்பது இயல்பானதுதான்.

 -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,710

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.