Show all

கொடூரமாக குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என்று பலரும் கொன்று குவிக்கப்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம்கள் வாழ்ந்த, கிராமங்களும் அழிப்பு

13,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சிங்கள அரசு பலநாடுகளின் துணையோடு தமிழீழ மக்களைக் கொன்றொழித்தது போல, மியான்மரில் சிறுபான்மையாக உள்ள ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது அந்நாட்டு ராணுவம் மட்டுமே தனித்தே, இன அடிப்படையிலான அடக்குமுறையைக் கையாண்டது. இதில் அங்குள்ள ரோஹிங்கியா முஸ்லிம்கள் கொடூரமாக வேட்டையாடப்பட்டு, குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என்று பலரும் கொன்று குவிக்கப்பட்டனர்.

இதனால் அங்கிருந்து தப்பிய லட்சக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்கதேசம், இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். புள்ளி விவரங்களின்படி, இந்தியாவில் மட்டும் 14 ஆயிரம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் ஐ.நா. அகதிகளுக்கான உரிமை ஆணையத்தில் பதிவு செய்து தங்கியுள்ளதாக நாடாளுமன்றத்தில் நடுவண் அரசு தெரிவித்தது.

இந்நிலையில், மியான்மரில் ராக்கைன் மாநிலத்தில் உள்ள 55 கிராமங்களில், ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் வசித்த நூற்றுக்கணக்கான வீடுகள் புல்டோசர்கள் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டிருப்பது செயற்கைகோள் படங்கள் மூலம் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் என்ற அமைப்பு, செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஆதாரமாகக் காட்டி இந்தத் தகவலை வெளிக்கொண்டு வந்துள்ளது. ரோஹிங்யா முஸ்லிம்கள் வாழ்ந்த கிராமங்கள் முழுவதும் தரைமட்டமாக்கப்பட்டிருப்பது செயற்கைகோள் படங்கள் மூலம் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,709

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.