Show all

இந்தியா முழுக்க கால் பங்கு மாணவர்கள் கூட சேர்க்கையில்லாத பொறியியல் கல்லூரிகள் மூடப்படுமா

16,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: தொடர்ச்சியாக 5 ஆண்டுகளாக 30 விழுக்காட்டிற்கு மேல் மாணவர்கள் சேராத காரணத்தினால், இந்தியா முழுவதும் 300க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில், வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்க அகில இந்திய தொழில்நுட்ப கழகம் முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக நடுவண் மனித வள மேம்பாட்டு அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், நாடு முழுதும் 3 ஆயிரம் தனியார் பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இங்கு 13.56 லட்சம் மாணவர்கள் படிக்க முடியும். இக்கல்லூரிகளை ஆய்வு செய்த போது, 300 கல்லூரிகளில் தொடர்ந்து 5 ஆண்டுகளாக 30 விழுக்காட்டிற்கு கீழ் மாணவர் சேர்ந்ததால், அடுத்த கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கவும், பொறியியல் கல்லூரியாக செயல்படவும் தடை விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது, அக்கல்லூரிகளை கலை அறிவியல் அல்லது தொழில்படிப்பு கல்லூரிகளாக மாற்றி கொள்ளும்படி அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதில் 150க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் 20 விழுக்காடு கூட மாணவர் சேர்க்கை நடக்கவில்லை. மேலும் 500 கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ளதால், அது குறித்து ஆய்வு நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக அகில இந்திய தொழில்நுட்ப கழகப் பேராசிரியர் அனில் டி சகாஸ்ரபுதே கூறியதாவது: கல்லூரிகள் மூடுவது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தி வருகிறோம். கல்லூரிகளை மூடுவது எளிது என்றாலும், அதனால் சில பிரச்னைகள் ஏற்படும். நிறுவனர்கள் செய்த முதலீடு, வங்கி கடன், கல்லூரிகளை முழுமையாக ஆய்வு செய்த பின் மூடுவதற்கு பதில் மாற்று வழிகளை ஆய்வு செய்ய அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். இது குறித்து இம்மாத இறுதிக்குள் முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,624

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.