Show all

ஈழத்தமிழர்களுக்கான நியாயம் கிடைப்பதில் இந்தச் செயல்பாடுகளாவது இருக்கிறதென்பதே ஆறுதல்

16,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: தன்னிச்சையாக தடுத்து வைத்தல் தொடர்பாக ஆராயும் ஐக்கிய நாடுகள் செயற்குழுவின் மூவர் கொண்ட குழுவினர் நாளை மறுதினம் திங்கட்கிழமை இலங்கை வருகின்றனர். இரண்டு கிழமைகள்; வரை இலங்கையில் தங்கியிருக்கும் ஐ.நா.செயற்குழு உறுப்பினர்கள் நாட்டின் மனித உரிமை நிலைமை குறித்து ஆராய்ந்து மதிப்பிடவுள்ளதுடன்

பல்வேறு தரப்பினரையும் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளனர்.

ஜோஸ் அன்டோனியோ, லீ டூமி மற்றும் எலினா ஸ்டீனிர்ட் ஆகிய மூவரே இலங்கைக்கு வருகை புரியவுள்ள ஐக்கிய நாடுகளின் செயற்குழுவினர்.

இந்த சிறப்பு நிபுணர்கள் காவல் நிலையங்கள் சிறைச்சாலைகள் புனர்வாழ்வு நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் சென்று நிலைமைகளை பார்வையிடவுள்ளனர்.

மேல் மாகாண வட மத்திய மாகாணம் வடக்கு கிழக்கு தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களுக்கும் ஐக்கிய நாடுகளின் சிறப்பு செயற்குழு நிலைமைகளை பார்வையிடவுள்ளது. அரச அதிகாரிகள் சமூக பிரதிநிதிகள் ஆகியோரையும் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளனர்.

தன்னிச்சையாக தடுத்து வைத்தல் தொடர்பாக ஆராயும் ஐக்கிய நாடுகளின் செயற்குழுவின் இலங்கை வருகை குறித்த மதிப்பீட்டு அறிக்கையானது ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் 39 ஆவது கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,624

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.