Show all

கொலை கொலையாய் முந்திரிக்கா இதழியலாளர் எல்லாம் எங்கிருக்கா

14,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: உ.பி. மாநிலம் கான்பூரில் பைக்கில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் செய்திஇதழ் நிருபர் சுட்டுக்கொல்லப்பட்டார். உத்தரபிரதேசத்தில் இது இரண்டாவது சம்பவம் ஆகும்.

சுட்டுக்கொல்லப்பட்ட நிருபர் கான்பூரை சேர்ந்த நவீன் ஸ்ரீவஸ்தவா என்பதும் இவர் உள்ளூர் ஹிந்தி நாளிதழ் ஒன்றின் நிருபராக உள்ளார் என்பதும் காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. பில்ஹாவூர் பகுதியில் உள்ள இதழியல் அலுவலகத்தில் பணி முடிந்து வெளியே வந்து கொண்டிருந்தபோது அவரை பைக்கில் வந்த மர்ம நபர்கள் சுட்டுகொன்று விட்டு தப்பியோடினர். கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.

கடந்த மூன்று மாதங்களில் இதழியலாளர்கள் கொலை பட்டியல் அதிகரித்து வருகிறது.

04,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119ல் (21.10.2017) இதே உ.பி. மாநிலம் காசிப்பூர் பகுதியில் ராஜேஷ் மிஸ்ரா என்ற நிருபர் பைக்கில் வந்த மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

20,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5119ல் (05.09.2017) கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கவுரி லங்கேஷ் என்ற பெண் நிருபர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

04,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119ல் (20.09.2017) திரிபுராவின் மேற்கு மாவட்டத்தில் மாண்டி பகுதியில் பழங்குடியினர் பகுதியில் ஏற்பட்ட கலவரம் குறித்த செய்தி சேகரிக்க சென்ற சாந்தனு பவுமிக் என்ற நிருபர் கொல்லப்பட்டார்.

06,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119ல் (22.11.2017) திரிபுராவில் சைதன் பத்திரிகா என்ற பத்திரிகை நிருபர் சுதீப் தத்தா, திரிபுரா மக்கள் முன்னணி என்ற அமைப்பினர் நடத்திய போராட்டத்தினை செய்தி சேகரித்து கொண்டிருந்தபோது காவலருடன் ஏற்பட்ட மோதலில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்நிலையில் இன்று கான்பூரில் நவீன் ஸ்ரீவஸ்தவா என்ற பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மக்களே- ஆதார், காகித பணமதி;ப்பிழப்பு, சரக்குசேவைவரி, என்று நள்ளிரவுகளில் நாயாய் பேயாய் அலையும் ஆட்சியில் இதழியலாளர்களுக்குப் பாதுகாப்பு எங்கே இருக்க முடியும் என்று மக்கள் பரிதவி;க்;;;;;;கிறார்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,622

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.