Show all

வேலி பயிரை மோய்ந்த உண்மை! சிலை கடத்திய அறநிலையத்துறை இணை ஆணையர்

14,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: சோழர் காலத்தில் கட்டப்பட்ட 1,000 ஆண்டு பழைமை வாய்ந்த பசுபதீஸ்வர் கோயிலில் கோயிலைச் சுற்றியுள்ள 73 கிராமங்களிலிருந்து பழைமையான ஐம்பொன் சிலைகள், வெங்கலச் சிலைகள் ஆகியவற்றைப் பாதுகாப்புக்காகப் வைத்துப் பாதுகாத்து வந்தனர்.

திருவிழா காலங்களில் மட்டும் சிலைகள் எடுத்துச் செல்லப்பட்டு மீண்டும் கொண்டுவந்து வைக்கப்படுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில், கடந்த தமிழ்தொடர்ஆண்டு-5119ல் (2013) கீழமணக்குடி விஸ்வநாதஸ்வாமி விநாயகர், புஷ்பகரணி, வள்ளி தெய்வானை, சந்திரசேகர அம்மன் சிலைகளும் ஸ்ரீரெங்கராஜபுரம் இடும்பேஸ்வரர் கோயிலுக்குரிய விநாயகர் சிலை என மொத்த 6 சிலைகள் காணாமல் போனது தெரியவந்தது.

சிலைகள் மாயமானது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோயில் பணியாளர்கள் என 10 பேர் மீது சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு காவல்துறையினர் ஆகஸ்ட் மாதம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், நேற்று சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுதுணை மாவட்டக் கண்காணிப்பாளர் .டி.குமார்-

இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர்கள்

கஜேந்திரன், காமராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து கும்பகோணத்தில் உள்ள அறங்கூற்றுவர் முன்பு அணியப்படுத்தினர். ஒரு வாரம் காவலில் வைக்குமாறு அறங்கூற்றுவர் உத்தரவிட்டார். பின்னர் திருச்சி மத்திய சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,622

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.