Show all

ஒரு ரூபாய் தாளுக்கு அகவை நூறு

14,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஒரு ரூபாய் தாள் அறிமுகப் படுத்தப்பட்டு இன்றுடன் 100 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 14,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5019ல் (30.11.1917) ஒரு ரூபாய் தாள் அறிமுகமானது. அதற்கு முன்பு ஒரு ரூபாய் வௌ;ளி நாணயமே புழக்கத்தில் இருந்தது.

முதலாவது உலக போரின் போது வௌ;ளிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் நாணயம் அச்சிட முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் ஜியார்ஜ் மன்னரின் புகைப்படத்துடன் ஒரு ரூபாய் தாள் வெளியிடப்பட்டது. அதன்பிறகு, அவ்வப்போது அச்சிடும் பணி நிறுத்தப்படுவதும், வடிவமைப்பு மாற்றப்படுவதுமாக ஒரு ரூபாய் தாள் நூற்றாண்டு கண்டுள்ளது.

மற்ற ரூபாய் தாள்களைப் போல ஒரு ரூபாய் தாள்களை ரிசர்வ் வங்கி வெளியிடுவதில்லை, நடுவண் அரசே வெளியிடுகிறது. அதனால்தான், இந்த தாளில்;, ரிசர்வ் வங்கி ஆளுநரின் கையெழுத்துக்கு பதிலாக, நடுவண் நிதித்துறை செயலாளரின் கையெழுத்து இடம்பெற்று இருக்கும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,622

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.