Show all

தமிழ்நாட்டு பாஜக கிளையினர் வசிப்பது எங்கே! இணையம் நிரம்பி வழியும் பகடியாடல்

பலவாறான பகடியாடலுக்கும், இடித்துரைத்தலுக்கும் பிறகு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 95விழுக்காடு நிறைவு பெற்றுள்ளது என்று பாஜகவிற்கான இந்திய அளவிலான தலைவர் ஜே.பி.நட்டா பேசியது தொடர்பான கீச்சை தமிழ்நாடு பாஜக கிளை நீக்கியுள்ளது.

07,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழ்நாடு பாஜக கிளையின் கீச்சுப் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவில், 'மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் 95விழுக்காடு முடிந்துள்ளன. எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான இடங்களும் நூறிலிருந்து, இருநூற்று ஐம்பதாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் முடிந்ததும், அதை தலைமைஅமைச்சர் திறந்து வைப்பார்' என்று கூறப்பட்டிருந்தது.

தமிழ்நாடு பாஜக கிளையின் பதிவு- சமூக வலைதளங்களில் பகடியாடலோடு, பேரளவான திறனாய்விற்கு உள்ளானது. மேலும், 95 விழுக்காடு முடிந்த எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே? என்று அந்த பகுதிக்கு சென்ற, விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் அங்கு கட்டுமான பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை என புகைப்படத்தை வெளியிட்டு கேள்வி எழுப்பி இருந்தனர். 

இதற்கெல்லாம் காரணம்- மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிக்கான பூர்வாங்க நடவடிக்கைகள் 95 விழுக்காடு முடிந்துள்ளதாக பாஜகாவின் இந்திய அளவிலான தலைவர் ஜே.பி.நட்டா பேசியதை நம்பி, தாங்கள் என்னவோ செவ்வாய் மண்டலத்தில் வசிப்பது போல, தமிழ்நாடு பாஜக கிளையின் கீச்சுப் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவில், 'மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் 95விழுக்காடு முடிந்துள்ளன. எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான இடங்களும் நூறிலிருந்து, இருநூற்று ஐம்பதாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் முடிந்ததும், அதை தலைமைஅமைச்சர் திறந்து வைப்பார்' என்று கூறப்பட்டிருந்ததுதான்.

பலவாறான பகடியாடலுக்கும், இடித்துரைத்தலுக்கும்; பிறகு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 95விழுக்காடு நிறைவு பெற்றுள்ளது என்று பாஜகவிற்கான இந்திய அளவிலான தலைவர் ஜே.பி.நட்டா பேசியது தொடர்பான கீச்சை தமிழ்நாடு பாஜக கிளை நீக்கியுள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,381.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.