Show all

ராணுவத்தை குவித்தெல்லாம் காஷ்மீரை தீவிரவாதிகளிடம் இருந்து பாதுகாக்க முடியாது: ஃபரூக் அப்து

ஒட்டுமொத்த இந்திய ராணுவத்தையும் குவித்தாலும் காஷ்மீரை தீவிரவாதிகளிடம் இருந்து பாதுகாக்க முடியாது என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் மூத்த தலைவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரான ஃபரூக் அப்துல்லா, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பாகிஸ்தானுடனேயே இருக்கும்;

ஜம்மு காஷ்மீரம் இந்தியாவுடனேயே இருக்கும் என்று கூறியிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் ஸ்ரீநகரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவில் இருக்கும் ஒட்டு மொத்த இந்திய ராணுவமும் போரிடுவதற்கு ஜம்மு காஷ்மீருக்கு வந்து குவிந்தாலும் தீவிரவாதிகளிடம் இருந்து மீட்டுவிட முடியாது. பயங்கரவாதம் மற்றும் தீவிரவாத செயல்களுக்கு பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண வேண்டும் என்றார்.

ஃபரூக் அப்துல்லாவின் தொடர்ச்சியான இந்தக் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.