Show all

இளங்கோவனைத் தலைவர் பதவியில் இருந்து நீக்க, விஜயதாரணி சோனியாவுக்கு கடிதம்

தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனை மாற்றக் கோரி ப.சிதம்பரம், குமரி அனந்தன்,  வசந்தகுமார், தங்கபாலு, கிருஷ்ணசாமி உள்பட பலர் சோனியாவை சந்தித்தனர்.

இப்போது அடுத்த மோதல் மகளிர் காங்கிரசுடன் ஏற்பட்டுள்ளது. தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவராக விஜயதாரணி எம்.எல்.ஏ. நியமிக்கப்பட்டதும் அவரது ஆதரவாளர்கள் அவருக்கு முக்கியத்துவம் கொடுத்தனர்.

சமீபத்தில் இந்திராகாந்தியின் பிறந்தநாளை யொட்டி சத்தியமூர்த்தி பவன் முன்பு வைக்கப்பட்டிருந்த பதாகையில் மாநில தலைவர் இளங்கோவன் படத்துக்கு இணையாக விஜயதாரணி படம் பெரிய அளவில் வைக்கப்பட்டிருந்தது. இது இளங்கோவன் ஆதரவாளர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

அந்தப் பதாகையில் விஜயதாரணியின் படம் கிழிக்கப் பட்டது. பதாகையும் அவிழ்த்து விட்டனர். இதனால் விஜயதாரணியின் ஆதரவாளர்கள் கோபம் அடைந்தனர்.

இதற்கிடையில் விஜயதாரணி பேட்டியின்போது,

இளங்கோவன் என்று குறிப்பிட்டார். அதை கேட்டதும் மாநில தலைவரை பெயரை  சொல்லி ஒருமையில் அழைக்கலாமா? என்று இளங்கோவன் ஆதரவு மகளிர் நிர்வாகி ஒருவர் கேட்டார்.

இதை விஜயதாரணி ஆதரவு பெண் நிர்வாகி ஒருவர் மகளிர் காங்கிரஸ் அலுவலகத்தில் சென்று கூறினார். இதை கேள்விப்பட்டதும் இரு பெண் நிர்வாகிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது.

அந்த நேரத்தில் சத்திய மூர்த்தி பவனில்  இருந்த விஜயதாரணி  ஆவேசத்துடன் இதுபற்றி கேட்க இளங்கோவன் அறைக்கு சென்றுள்ளார். அவர் இளங்கோவனிடம், பதாகையைக் கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆத்திரத்துடன் கூறினார்.

கோபத்தில் கொந்தளித்த அவரை பார்த்ததும் கேட்கிறேன் என்று இளங்கோவன் சமாதானப்படுத்தி இருக்கிறார். ஆனாலும் விஜயதாரணி விடாமல் கோபத்தில் சத்தம் போட்டுள்ளார்.

ஆதைக் கேட்டதும் இளங்கோவனும் பொறுமை இழந்து வெளியே சென்று கத்துங்கள் என்று சத்தம் போட்டார்.

இளங்கோவனுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து அவர் பெண் நிர்வாகிகளை மதிக்கவில்லை. அவரை தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று சோனியாவுக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

சத்தியமூர்த்தி பவனில் நடந்த சம்பவம் காங்கிரசார் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.