Show all

செல்பேசி எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டிய கட்டாயம் என்ன: உச்சஅறங்கூற்றுமன்றம்

13,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: செல்பேசி எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டிய கட்டாயம் என்ன? என்று 4 வாரத்திற்குள் பதிலளிக்குமாறு நடுவண் அரசின் சம்பந்தப்பட்டத்துறைகளுக்கு உச்சஅறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டுள்ளது.

     செல்பேசி பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தங்களது செல்பேசி எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்று குறுந்தகவல்களை அனுப்பி வருகின்றன செல்பேசி நிறுவனங்கள். இதனால் இணைப்பு துண்டிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் கடைகடையாக ஏறிஇறங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

     மோடி அரசு பதவி ஏற்றதிலிருந்து தான் இந்தியாவின் சர்வாதிகாரி போலவும், மக்கள் அனைவரும் அயல்மண்ணில் இருந்து குடியேறிய அகதிகள் போலவும், அவர்கள் எந்த நேரத்திலும் இந்தியாவிற்கு எதிராக செயல்படுவதற்கு நேரம் பார்த்துக் கொண்டு இருப்பது போலவும், தான் மட்டுந்தான் இந்தியாவைக் காப்பாற்றுவதற்கான ஒட்டு மொத்த குத்தகை எடுத்திருப்பது போலவும், மக்களைச் சந்தேகக் கண்ணோடு, மக்களை ஒவ்வொன்றுக்கும் தெருவில் அலைய விட்டுக் கொண்டிருக்கிறார். 

     இந்நிலையில் நடுவண் அரசின் இந்த உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சஅறங்கூற்றுமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தன. இதில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வழக்கும் அடங்கும். அப்போது ஆதாரை தொலைபேசி எண்ணுடன் இணைக்க கட்டாயப்படுத்தும் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு உச்சஅறங்கூற்றுமன்றம் காரணம் கேட்டு அறிக்கை அனுப்பியுள்ளது.

     கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது ஆதாரை பல்வேறு மக்கள் நலத்திட்டங்களுக்கு இணைப்பது கட்டாயம் என்றும் தேவைப்படும் பட்சத்தில் காலக்கெடுவை 17,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119 (31.03.2018) வரை நீட்டிக்க தயாராக உள்ளதாக நடுவண் அரசு உச்சஅறங்கூற்றுமன்றத்தில் தெரிவித்திருந்தது.

     நடுவண் அரசு என்ன நலத்திட்டத்தை மக்களுக்கு அறிவித்து, யாருக்கு என்ன செய்திருக்கிறது? இந்த இந்த ஆதார் எண்களுக்கு தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டது போல 15இலட்சம் போடுவதற்கு, மக்களின் எந்த அடையாளத்தையும் இணைக்கச் சொன்னால் இணைத்து விட்டு போகிறார்கள். அதை விடுத்து எல்லா மக்களையும் தெருவில் அலைய விட்டால், மக்கள் மோடியின் வீட்டில் சோற்றுக்காக காத்திருக்கிற நாய்களா என்ன?

     நடுவண் அரசின் இந்த நிலைப்பாட்டையடுத்து ஆதாரை இணைக்காதவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்காது என்று என்ன உத்தரவாதம் என கேள்வி எழுப்பியது. இது குறித்து பதில் தாக்கல் செய்ய அறங்;கூற்றுமன்றம் காலஅவகாசமும் அளித்திருந்தது.

     ஆதாரை செல்பேசி எண்ணுடன் இணைப்பதை எதிர்த்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தொடர்ந்த வழக்கையும் உச்சஅறங்கூற்றுமன்றம் கவனத்தில் கொண்டது. அப்போது நாடாளுமன்ற சட்டங்களுக்கு எதிராக ஒரு மாநில அரசு வழக்கு தொடுக்க முடியாது என்று குறிப்பிட்டது.

     ஆனால் மம்தா மேற்குவங்க முதல்வர் என்ற அடிப்படையில் இன்றி தனி நபர் என்ற அடிப்படையில் வழக்கை தாக்கல் செய்யலாம் என்று அறங்கூற்றுமன்றம் கருத்துக் கூறியுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.