Show all

ரஜினி இந்தியத் தலைமை அமைச்சராகிட 40ம் தரும் தமிழகம்! முதல்வரா? வேண்டாம்!

13,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழர்களால், குடும்ப அமைப்பு முறை தொடர்ந்து 5119 ஆண்டுகளாக வழிவழியாகப் பேணப்பட்டு வருவதால், அதில் தமிழர் பண்பாட்டு நெறிமுறைகளைக் காணமுடியும். பிள்ளைகளை வளர்த்து படிக்க வைத்து திருமணம் செய்விப்பது என்கிற பிள்ளைகளுக்கான கடமைகள் அனைத்தும் பெற்றோர்களைச் சார்ந்ததாகவே இருக்கிறது தமிழ்க் குடும்ப அமைப்புமுறையில்.

அவற்றுக்கான பொருளைப் பெற்றோர்கள் தொழில் மூலமாகவே ஈட்டுகின்றனர். நடப்பில் நம்மைப் பிணைத்துக் கொண்டுள்ள இற்றைச் சமுதாய அமைப்புமுறை தொழில் செய்து வருமானம் ஈட்டிய போதும் தம்மக்களின் உழைப்பைச் சுரண்ட வரியும் விதித்து மிரட்டி ஊடகங்களில் விளம்பரம்செய்து கடுமையாக வசூலிக்கவும் செய்து அதையும் ஆளும்பாழும் வீணடிக்கிறது. உலக வங்கியில் கடனும் வாங்குகிறது. மாதிரிச் சமுதாயமான குடும்பத்தில் பிள்ளைகளைப் பெற்றோர் தம் தொழில் வருமானத்தில் சிறப்பாகப் பேணும் போது பெரியகுடும்பமான சமுதாய அமைப்புமுறையால் சாதிக்க முடியாதா என்ன?

ஆனால் தமிழர் இன்றைக்கு சார்ந்திருக்கிற சட்ட சமுதாய அமைப்பு முறைகளோ பன்முகப் பட்ட அயல் இயல்களை உள்வாங்கியதாகும்.

தமிழர் கண்ட குடும்ப அமைப்புமுறை சமுதாய அமைப்புமுறைக்கான ஒரு முன்மாதிரிதான். பழந்தமிழ்ச் சமுதாய அமைப்புமுறை இன்றைக்கும் அழகாக நடைபோட்டு வரும் குடும்ப அமைப்புமுறை போன்று நேர்த்தியாக இருந்தது. அதன் பொருட்டே மன்னர் அணை கட்டி நீர்வளம் பெருக்கியதும்,

புலவர்கள் நல்லாட்சி அமைய மன்னர்களை கடிந்;து திருத்தியதுமான வரலாற்றை- பத்துப் பாட்டு, எட்டுத்தொகை, தொல்காப்பியம், சிலப்பதிகாரம், திருக்குறள் மூலம் நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

நடைமுறையில் அரசை கடிந்து திருத்த வேண்டிய ஊடகங்கள் விளம்பரங்களுக்காக அரசை அண்டிப் பிழைப்பதும், தமிழக ஆட்சியில் இருப்பவர்களோ நடுவில் ஆட்சிப் பொறுப்;பேற்கிறவர்களைத் தலைமேற்கொண்டு செயல் படுத்;;;;துகிறவர்களாகவே இருந்து வருவதால் அனுபவிக்க முடியவில்லை.

இந்தியா விடுதலை பெற்றதிலிருந்து நடுவண் அரசில் ஆட்சியில் அமைந்தவர்கள்-

ஆரிய கலாச்சாரத்தில் ஊறித்திளைத்து, நால்வருண வேறுபாடுகளை ஏற்றுக் கொண்டு தங்களை ஹிந்துக்களாக பாவித்துக் கொண்டு, உலகமே நாவலந்தேயத்தின் சொல்லடியாக இந்தியா என்று அழைக்கிற போது, தமிழகம் விடுத்த மாநிலத்தவர்கள் பாரதம் என்று சொல்லித் திரிவதும், தொடர்ந்து ஹிந்தி பேசுகிறவர்களே நடுவண் அரசைக் கைப்பற்ற வாய்ப்பளித்தும், கொள்கையோ நடுநிலையோ இல்லாத காங்கிரஸையும், இந்;;திய மக்களை பாரத மக்களாக வெறுமனே இராமாயண மகாபாரத பெருமைகளில் அடிமைப் படுத்த முயல்கிற பாஜகவையும் தேசிய கட்சிகள் என்று மரமண்டைகளாக போற்றிக் கொள்கிற அடிமைகளாக முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கின்றனர்.

இந்திய ஒன்றியம் என்று ஆங்கிலேயன் விடுதலை கொடுத்த நாட்டை,

இந்திய அரசிலமைப்புச் சட்டப்படி,

தமிழ் உள்ளிட்ட 22மொழிகள் அலுவல் மொழிகளாக விதிகள் வகுக்கப் பட்டுள்ள நிலையில்,

ஹிந்தியை ஆட்சி மொழியாக முன்னெடுக்கிற நால்வருண மனுநீதி பாரதத்தை-

தொடர்ந்து கட்டமைக்க முயல்கிறார்கள்.

இந்தியா விடுதலை பெற்றதிலிருந்து நடுவண் அரசு நடுநிலையானதுமில்லை; நமக்கானதுமில்லை. தமிழக அரசு ஒன்றும் சாதிக்கவில்லை; சாதிக்கவும் முடியாது.

1.கச்சத் தீவு இழப்பு 2.ஹிந்தி திணிப்பு 3.தமிழக ஆட்சிகள் கலைப்பு 4.தமிழக ஆட்சியாளர்கள் மீது வழக்குகள் 5.தமிழ் தெரியாத ஆளுநர்கள் 6.தமிழ் தெரியாத மாவட்ட ஆட்சியாளர்கள் 7.தமிழ் தெரியாத அறங்கூற்றுவர்கள் 8.சிந்து சமவெளி அகழ்வாராய்ச்;;;சி 8.அரிக்காமேடு அகழ்வராய்ச்சி 9.கீழடி அகல்வாராய்ச்சி 10.திண்டுக்கல் தொல்;பொருள் ஆய்வு 11.காவிரி இழப்பு 12.முல்லை பெரியாறு பிரச்சனை 13.ஹைட்ரோகார்பன் 14.தமிழக விழாக்கள் மீது தடை 15.தொடரும் தமிழக மீனவர்கள் பிரச்சனை. 16.ஈழத்தில் இலட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிப்பு 17.பணமதிப்பு நீக்கம் 18.தமிழகத்தில் அணுஉலைகள் 19.சரக்குமற்றும் சேவைவரி 20.ஆதார; அலைகழிப்பு 21.நீட்தேர்வு

இப்படி ஏராளமான பிரச்சனைகளோடு தமிழர்களைக் காப்பாற்றிக் கொண்டிருப்பது தமிழர் குடும்ப அமைப்பு முறைகள் மட்டுமே.

மேற்கு வங்காள மாநில அரசு, நடுவண் அரசின் ஆதாருக்கு எதிராக வழக்கு தொடர முடியாது என்றால், ஒன்றும்;;; கையாளாகாத மாநில ஆட்சிக்கு தமிழகத்திற்கு நன்;மை செய்ய விரும்பும் எந்தத் தலைவர்களும் தேவையில்லை.

செயலலிதா அவர்களே இதையெல்லாம் உணர்ந்து கொண்டுதாம் இறுதி நாட்களில், நாற்பதும் நமதே என்று தலைமை அமைச்சர் பதவிக்கு குறி வைத்தார்.

ரஜினி தமிழகத்திற்கு ஏதாவது செய்யவேண்டும் என்று விரும்பினால் நடுவண் அரசுக்கு குறி வைக்கட்டும் நாற்பதும் தருவோம். சீமான் கூட தடை சொல்ல மாட்டார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.