Show all

அறங்கூற்றுவர்கள் முறைபிறழ்வு அடிப்படை இல்லாமல் திடிரென்று ஆகாயத்ததில் முளைத்த கட்டிடமா என்ன

28,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உச்ச அறங்கூற்றுமன்ற தலைமை அறங்கூற்றுவர்கள் இதழியலாளர்களை அழைத்து பேட்டியளித்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.

      காங்கிரஸ் கட்சியின் கீச்சு பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: உச்சஅறங்கூற்றுமன்றச் செயல்பாடு குறித்து 4 அறங்கூற்றுவர்கள் தெரிவித்த கருத்துகள் எங்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, அறங்கூற்றுவர்கள் பேட்டி குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் ராகுல் ஆலோசனை நடத்தினார்.

முன்னாள் சட்ட அமைச்சர் அஸ்வினி குமார் கூறியதாவது: அறங்கூற்றுமன்றத்தில் நடப்பதை பொது வெளியில் கொண்டு வர வேண்டிய சூழ்நிலைக்கு அறங்கூற்றுவர்கள் தள்ளப்பட்டனர்.

இது இந்திய வரலாற்றில் கறுப்பு நாள். அறங்கூற்றுவர்கள் எழுப்பிய பிரச்னை குறித்து தேசம் விவாதிக்க வேண்டிய நேரம் இது. தலைமை அறங்கூற்றுவர் சம்பந்தப்பட்ட அறங்கூற்றுவர்களும் இது குறித்து ஆலோசனை நடத்தி பிரச்னைக்கு தீர்வு காண்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

      முன்னாள் சட்ட அமைச்சர் பரத்வாஜ் கூறுகையில், அறங்கூற்றுமன்றத்தின் பெருமைக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டால் என்ன இருக்கும். ஜனநாயகத்தின் தூணாக அறங்கூற்றுமன்றம் இருக்க வேண்டும். அது எவ்வாறு இயங்கிறது என்பதை கவனிக்க வேண்டியது சட்ட அமைச்சரின் பொறுப்பு.

      மேற்கு வங்க முதல்வர் மம்தா கூறுகையில், நான்கு அறங்கூற்றுவர்களின் கருத்து எங்களுக்கும், நாட்டு மக்களுக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார்.

      கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலர் சீதாராம் யெச்சூரி கூறியதாவது: உச்ச அறங்கூற்றுமன்றத்தின் தனித்தன்மை மற்றும் நேர்மை ஆகியவை எப்படி பாதிக்கப்பட்டது என்பது குறித்து விரிவாக விசாரிக்கப்பட வேண்டும். ஜனநாயகத்தின் மூன்று தூண்களில் எந்த பிரச்னை எழுந்தாலும் அவை சரி செய்யப்பட வேண்டும்.

      இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் டி.ராஜா கூறியதாவது: அறங்கூற்றுவர் செல்லமேஸ்வரரை நீண்ட நாட்களாக தெரியும். அவரும் மற்ற அறங்கூற்றுவர்களும் மிகப்பெரிய நடவடிக்கை எடுத்த போது, அவரை சந்திக்க வேண்டும் என நினைத்தேன். இதற்கு அரசியல் சாயம் பூச வேண்டாம். நாடு மற்றும் ஜனநாயக நலன் குறித்து அனைவருக்கும் கவலை உள்ளது.

      முன்னாள் உச்ச அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர் கங்குலி கூறுகையில், பிரச்னை குறித்து கேள்விப்பப்பட்டதும் கவலையடைந்தேன். இது நடந்திருக்கக்கூடாது. ஆனால், அறங்கூற்றுவர்களுக்கு வலிமையான காரணங்கள் உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

      ஆனால் நம்ம தமிழ்நாட்டு அறங்கூற்றுவர் கர்ணன் உயர் அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர் மீது குற்றச்சாட்டு வைத்தபோதும், அவரை மனநோயாளியாக சித்தரித்தும், மன நோயாளி என்று சித்தரித்து விட்டு எப்படி தண்டனை வழங்கலாம் என்ற அடிப்படை கூட இல்லாமல், தண்டனை வழங்கப் பெற்று அண்மையில் தான் திரும்பியிருக்கிறார்.

      இன்றைக்கு அறங்கூற்றுவர்கள் முறைபிறழ்வு அடிப்படை இல்லாமல் திடிரென்று ஆகாயத்தில் முளைத்த கட்டிடம் போல நீலிக்கண்ணீர் வடிக்கும்

இந்த ஊடகங்கள் கட்சிகள் எல்லாம், அறங்;கூற்றுவர் கர்ணன் அவர்களையும், அவர் குற்றச்சாட்டுகளையும் ஒரு பொருட்டாகவே மதிக்காதது வேடிக்கைதான்.

      -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,665

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.