Show all

ஓ இதுதான் காஷ்மீர் நிலவரமா! ஆளுநர் சத்யபால் மாலிக்கின் அதிரடியும், அதற்கு ராகுல் அவர்கள் கொடுத்த பதிலடியும்

தற்போதைய காஷ்மீரின் நிலவரத்;தை மிகத் தெளிவாக அறிந்து கொள்ள பயன் படுவதாய் உள்ளது காஷ்மீர் மாநில ஆளுநர் சத்யபால் மாலிக்கின் அதிரடியும் அதற்கு ராகுல் கொடுத்த பதிலடியும்

28,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஜம்மு காஷ்மீரில் வன்முறைகள் நிகழ்கின்றன என கூறியிருந்தார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. இதற்கு அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக், அப்படியெல்லாம் இல்லவே யில்லை என்று மறுப்பு தெரிவித்திருந்தார்.

அவர் அந்த மறுப்பில், உங்களுக்கு விமானத்தை அனுப்புகிறேன். அதில் வந்து காஷ்மீர் நிலவரத்தை பார்த்துவிட்டு பேசுங்கள் என கூறியிருந்தார். இதற்கு பதில் தந்த ராகுல் காந்தி, உங்கள் விமானம் வேண்டாம். அரசியல் கட்சித் தலைவர்களுடன் வருகிறோம். மக்களை சுதந்திரமாக சந்திக்க அனுமதி தாருங்கள் என பதிலடி கொடுத்திருந்தார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,243.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.