Show all

தொடர்ந்து சரியும் வாகன நிறுவனப் பங்குகள்!

ஒட்டு மொத்த பங்குச் சந்தையும் தொடர்ந்து சரிவை நோக்கி பயணிக்கும் அதே வேளை, வாகன நிறுவனங்களின் பங்குகளோ படு வேகமாக அதளபாதாளத்திற்கு சரிகின்றன.

29,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நேற்றைய பங்குச்சந்தை வீழ்ச்சியில் நிறைவுபெற்றது. எச்டிஎப்சி வங்கி, இன்போசிஸ், ஐடிசி, லார்சன் டர்போ, ஐசிஐசிஐ வங்கி மற்றும் டிசிஎஸ் ஆகிய நிறுவனங்கள் அதிகப்படியான வீழ்ச்சியை சந்தித்துள்ளன.

நிப்டி 10,950 புள்ளிகளுக்குக் கீழ் வீழ்ந்தும், சென்செக்ஸ் 611 புள்ளிகள் வரை வீழ்ந்தும் நிறைவடைந்துள்ளது. சீனா- அமெரிக்கா இடையேயான வர்த்தகப் போர், ஹாங்காங் போராட்டம் ஆகியவற்றின் காரணமாக பங்குச்சந்தை கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்து வருவதாகச் சொல்லப் படுகிறது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் 71 ரூபாய் ஆக உள்ளது.

அதிகப்படியான வீழ்ச்சியை இந்திய வாகனத் துறை நிறுவனப் பங்குகள் சந்தித்து வருகின்றன. இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் அறிக்கையின் அடிப்படையில் பயணிகள் கார்களின் விற்பனை 30.9 விழுக்காடு வீழ்ச்சியையும், வணிகக் கார்களின் விற்பனை 25.7 விழுக்காடு வீழ்ச்சியையும் சந்தித்துள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,244.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.