Show all

சுழியம்குற்ற பாதுகாப்பு குறித்த எச்சரிக்கை உணர்வு வாழ்க்கையின் வழிமுறையாக மாறிவிட வேண்டும்: மோடி

08,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: கவர்ச்சி வசனங்கள் பேசி தொடர்ந்து இந்திய மக்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடிமைகளாக்கிக் கொண்டிருக்கும் மேதகு மோடி அவர்களின் அடுத்த கவர்ச்சித் தூண்டில்:

அதிகாரம் வழங்குவதற்கு செல்பேசி தொழில்நுட்பத்தின் ஆற்றலை அரசு பயன்படுத்தி வருவதாக மோடி தெரிவித்துள்ளார். Global Conference on Cyberspace என்ற கருத்தரங்கை மோடி தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர், தொழில்நுட்பம் எல்லாவற்றையும் சாத்தியமாக்குவதாகவும், அரசாளுமைக்கும், சேவைகளை வழங்குவதற்கும் எண்ணிம தொழில்நுட்பம் திறனுள்ள வழிகளை வழங்குகிறது என்றார்.

சமூகத்தின் பலவீனமான பிரிவினர், சுழியம் குற்றவாளிகளின் தீய நோக்கங்களுக்கு பலியாவதை தடுப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய மேதகு மோடி,

சுழியம் பாதுகாப்பு குறித்த எச்சரிக்கை உணர்வு வாழ்க்கையின் வழிமுறையாக மாறிவிட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

UMANG என்ற செல்பேசி செயலியையும்; விழாவில் மோடி அறிமுகப்படுத்தினார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,616

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.