Show all

14 மாநிலங்களில் உள்ள 116 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது! இன்று 3வது கட்ட மக்களவைத் தேர்தல்

14 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 116 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இது மூன்றாவது கட்ட நாடாளுமன்றத் தேர்தல்.

10,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கும், குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும்,  இன்று  ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. கர்நாடகவில் 2வது கட்டமாக மீதமுள்ள 14 தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடக்கிறது.
இதுதவிர ஜம்மு-காஷ்மீர், திரிபுராவில் தலா ஒரு தொகுதி, மகாராஷ்டிராவில் 14  தொகுதிகள்,  ஒடிசாவில் 6 தொகுதிகள், உ.பி.யில் 10 தொகுதிகள், மேற்கு வங்கம் 5 தொகுதிகள்  கோவா 2 தொகுதிகள், அசாம் 4 தொகுதிகள், பிகார் 5 தொகுதிகள், சத்தீஸ்கரில் 7தொகுதிகள், ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடக்கிறது.
யூனியன் பிரதேசங்களில்  தாத்ரா- நாகர் ஹவேலி , டாமன் டையூ ஆகியவற்றில் தலா ஒருதொகுதியில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.  
3ஆம் கட்டத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திபோட்டியும் வயநாடு தொகுதி, சமாஜவாதிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் போட்டியிடும் மெயின்புரி,  காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே போட்யிடும் குல்பர்கா,  முன்னாள் நடுவண் அமைச்சர் சசி தரூர் போட்டியிடும் திருவனந்தபுரம் தொகுதி, அமித்சா போட்டியிடும் குஜராத்தின் காந்திநகர் தொகுதி ஆகியவை கவனம் பெற்றுள்ளன.
கேரளாவில் உள்ள 20 மக்களவைத் தொகுதிகளில் மொத்தம் 23 பெண் வேட்பாளர்கள் உள்பட 227 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 
குறிப்பாக காங்கிரஸ் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வயநாடு தொகுதியிலும், திருவனந்தபுரத்தில்  மூத்த தலைவர் சசிதரூர், மலப்புரத்தில் பி.கே.குஞ்சாலிக்குட்டி, கொல்லத்தில் எம்.கே. பிரேமச்சந்திரன், எர்ணாகுளத்தில் ஹிபி ஈடன், சாலக்குடியில் இன்னோசென்ட் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,131.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.