Show all

தம்படம் எடுத்துக் கொள்வதில் கொரில்லா குரங்குகளுக்கும் அலாதி மகிழ்ச்சி!

காங்கோ நாட்டில் இரண்டு கொரில்லா குரங்குகள் தம்படத்திற்கு பாவணை காட்டும் போது, மனிதர்களைப் போலவே விதவிதமாக மாற்றி பாவணைக் காட்டி வியப்பில் ஆழ்த்துவதாக வெளியான படங்கள் இணைத்தில் அசத்தல். 

10,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: நடு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள காங்கோ நாட்டின் கிழக்கு பகுதியில் விருங்கா உயிரியல் பூங்காவில் உள்ள கொரில்லா வகை குரங்குகள் இரண்டு, தம்படத்திற்கு ஆர்வம் காட்டும் செய்தி வெளியாகி இணையத்;தைக் கலக்கி வருகிறது.
பூங்கா காவலாளி, (சவுக்கிதார் அல்ல) மேத்யூ சவாமு செல்பேசியை தூக்கினாலே அந்த 2 கொரில்லா குரங்குகளும்  வேகமாக ஓடி வந்து படமெடுக்க பாவணை காட்டுகின்றன.
அது மட்டும் இன்றி அந்த 2 கொரில்லாக்களும், தம்படத்திற்கு பாவணை காட்டும் போது மனிதர்களைப் போலவே விதவிதமாக முகபாவனைகளை மாற்றி ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. அந்த வகையில், மேத்யூ சவாமு அண்மையில் அந்த 2 கொரில்லாக்களுடன் எடுத்த தம்படம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இந்தப் படம் பார்க்கவும், விரும்பவும், பகிரவும்பட்டு, உலகம் முழுவதும் வேகமாக பரவிவருகிறது.   

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,131.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.