Show all

டும்.டும்.டும். கர்நாடக மாநிலத்துக்கென தனிக் கொடி! முதல்வர் சித்தராமையா அறிமுகம்

25,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கர்நாடக மாநிலத்துக்கென தனிக் கொடியை முதல்வர் சித்தராமையா அறிமுகம் செய்து வைத்தார்.

முன்னதாக கர்நாடகக் கொடியை உருவாக்க ஒரு குழுவை உருவாக்கியிருந்தார் சித்தராமையா. இந்தியக் கொடியை போலவே மூவர்ணங்களை கொண்டதாக உள்ளது இந்தக் கொடி. மேலே மஞ்சள் நிறமும், நடுவே வெள்ளை நிறமும், கீழே சிவப்பு வண்ணமும் கொண்டதாக உள்ள இந்தக் கொடியின் நடு பகுதியில் கர்நாடக மாநில அரசின் சின்னம் இடம்பெற்றுள்ளது.

தேர்தல் நெருங்கும் நெரத்தில் இந்தக் கொடியை வைத்து பா.ஜ.கவுக்கு முற்றுகை வைக்க சித்தராமையா முயலுகிறார் என கூறப்படுகிறது. 

கொடிக்கு அனுமதி கொடுப்பதை பா.ஜ.க விரும்பாத நிலையில், இதை வைத்து கன்னடர்களிடம் பா.ஜ.கவுக்கு எதிரான பிரச்சாரத்தை கொண்டு செல்வது சித்தராமையா திட்டம் என கர்நாடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,721.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.