Show all

பாட்டுக்குப் பாட்டெடுத்து! லெனின் சிலை அகற்றத்திற்கு, கொல்கத்தாவில் மோடி உருவ பொம்மை எரிப்பு

25,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பாஜகவின் வாய்ச்சவடால்களை நம்பி திரிபுராவின் மக்கள் மாற்றி வாக்களித்து, பாஜகவை ஆட்சியில் அமர்த்தினார்கள். லெனின் சிலையை அகற்றினால்தான் தங்களுக்கு வாழ்வும் வளமும் என்று மக்கள் பாஜகவிற்கு வாக்களித்தது போல, முதற்கட்ட வேலையாக லெனின் சிலை உடைப்புகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது பாஜக. இதில் தமிழகம் வரை பெருமை வேறு. 

இங்கும் தமிழ்மக்கள் தமிழகத்தில் உள்ள பெரியார் சிலைகளை யெல்லாம் அப்புறப் படுத்துவதற்கு பாஜகவிற்கு வாக்களிக்கப் போகிறார்களாம். நாளை எச்.ராஜாவும், தமிழிசையும், பொன்இராமச்சந்திரனும், பெரியார் சிலை அகற்றத்திற்கு கடப்பாரை, மண்வெட்டி சகிதாமாகக் கிளம்புவார்கள்hம்! போங்கடா நீங்களும் ஒங்க கற்பனையும்.

திரிபுராவில் பா.ஜனதா ஆட்சிக்குவந்த பின்னர் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தது. அங்கு லெனின் சிலை அகற்றப்பட்டது பதட்டத்தை அதிகரித்து உள்ளது. பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. 

திரிபுராவில் அரசியல் வன்முறை வெடித்து உள்ளது தொடர்பாக சீதாராம் யெச்சூரி பேசுகையில், ‘அரசியல் வன்முறையில் பாரதீய ஜனதா செழித்தோங்குகிறது. இது பாரதீய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இயற்கையான குணமாகும். தாக்குதல்களை ஆளுநர் கொண்டாடுவது என்பது மிகவும் வெட்கக்கரமான செயலாகும்’ என்றார். 

திரிபுரா வன்முறை சம்பவங்கள் மற்றும் லெனின் சிலை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொல்கத்தாவில் லெனின் சிலையின் முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்துவார்கள் என தெரிவித்தார். 

அதன்படி திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொல்கத்தாவில் நடைபெற்ற போராட்டத்தில் பிரதமர் மோடியின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,721.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.