Show all

திரிபுரா பாஜக முதல்வர் அள்ளிவிட்ட டுபாக்கூர்! மகாபாரத காலத்திலேயே இணையப் பயன்பாடாம்

05,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இணையப் பயன்பாடு என்பது ஏதோ புதிய கண்டுபிடிப்பு போன்று இன்றைய தலைமுறை பீற்றிக் கொள்வதாகவும், அது மகாபாரத காலத்திலிருந்தே இருப்பதாகவும் திரிபுரா முதல்வர் பிப்லாப் தேப் தன்னுடைய டுபாக்கூர் கருத்துக்களை அள்ளி விட்டிருக்கிறார்.

அகர்தலாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்ற அழைக்கப் பட்ட முதல்வர் பிப்லாப் ஆற்றிய டுபாக்கூர் உரை: 

இணையதள பயன்பாடு என்பது மகாபாரத காலத்திலிருந்தே உள்ளது. கண்பார்வையற்ற திரிதராஷ்டிரர், குருசேத்ர யுத்தம் நடந்துகொண்டிருந்தபோது, போர்க்களத்தின் அருகே இல்லாத போதே, அங்கு நடைபெறும் தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொண்டார். இது அப்போது இருந்த தொழில்நுட்பம் மற்றும் செயற்கைக்கோள் தொடர்பின் மூலமே சாத்தியமானது. 

(ஆனால் போகூழ் வயமாக  செயற்கை விழி பொருத்தும் தொழில் நுட்பம் தான் இல்லாமல் போய் விட்டது.)

திரிபுரா முதல்வரின் இந்த டுபாக்கூருக்கு முன்மாதிரியாக,  குஜராத் முதல்வர் விஜய் ரூபானியின் இராமரின் அம்புகளை ஒத்த இஸ்ரோ ஏவுகணைகள் குறித்த டுபாக்கூர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த டுபாக்கூர் திறமையை ஈராயிரம் ஆண்டுகளாக கொஞ்சம் கூட வெட்கமேயில்லாமல் பயன்படுத்தி கொண்டிருப்பவர்களிடமிருந்து இந்தியாவை மீட்க ஈராயிரம் பெரியார் வந்தாலும் முடியாது அவர்களுக்கு தொடர்ந்து வாக்களிக்கும் மூடர்களாக இந்தியர்கள் இருக்கும் வரை.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,761.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.