Show all

தமிழ் தொலைக்காட்சி ஒளியலை வரிசைகளை இலவயமாகப் பயன் படுத்தும் வெளிநாட்டுச் செயற்கை கோள்கள்

05,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: வெளிநாட்டுச் செயற்கைக்கோள்கள் மூலம்; பல தமிழ் தொலைக்காட்சி ஒளியலை வரிசைகள் ஒளிபரப்பாகி வருகின்றன. 

இதற்காக, அப்பகுதியில் வாழும் மக்கள் தங்கள் வீட்டு தொலைக்காட்சிகளின் ஒளிவாங்கும் சிறு குடை அமைப்புகளை அந்த செயற்கைக்கோள்கள் உள்ள திசையை நோக்கி திருப்பி வைக்க வேண்டும். அப்போது, தமிழ் தொலைக்காட்சி ஒளியலை வரிசைகளுக்காக கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை.

இந்த செயற்கைக்கோள்களைக் கட்டுப்படுத்த ஒரு புதிய கருவியை கண்டுபிடிக்குமாறு நடுவண் அரசின் மூலமாக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திடம் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,761.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.