Show all

நாளை இவர்களுடையதே! இந்தியத் தலைமைஅமைச்சரை தீர்மானிக்கவிருக்கிற இந்தியாவின் பத்து மாநிலக்கட்சிகள் என்னென்ன?

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் சில பாஜக ஆதரவு ஊடகங்கள் பாஜக தனிப்பெரும்பான்மை பெறும் என்று பரபரப்பு கிளப்பி, மாநிலக் கட்சிகளின் கூட்டணி ஆட்சிதான் என்று நடுநிலை கருத்துக் கணிப்பில் முடிவாகி, தற்போது: அந்தக் கூட்டணிகளில் யார் இந்தியத் தலைமை அமைச்சர் என்ற ஆர்வம் தீயாகி வருகிறது.

08,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நாளை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், இந்தியாவில் தற்போது: அருணாச்சல் பிரதேசம், அரியானா, குசராத், அசாம், சார்க்கண்ட், மகாராட்டிரம், உத்தராகண்டம், உத்தரப் பிரதேசம், மணிப்பூர், கோவா, திரிபுரா, மேகாலயா, இமாச்சலப் பிரதேசம் ஆகிய 13 மாநிலங்களில் ஆட்சி புரிந்து கொண்டிருக்கிற பாஜகவிற்கோ,  

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர்,புதுச்சேரி, பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களில் ஆட்சி புரிந்து கொண்டிருக்கிற காங்கிரஸ் கட்சிக்கோ நடுவண் அரசில் ஆட்சிப் பொறுப்பேற்றிட தனிப்பெரும்பான்மை அமைய வாய்ப்பேயில்லை என்று கருதப் படுகிறது.

இதனால், 1.கேரளாவில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

2.தமிழகத்தில் பாஜகவின் தயவில், தற்காலிக ஆட்சியில் இருக்கிற அதிமுகவிற்கு மாற்றாக அடுத்து தமிழக ஆட்சியில் அமரவிருக்கிற திமுக

3.ஆந்திரப் பிரதேசம் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் தெலுங்கு தேசம்

4.கர்நாடகாவில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் மதச்சார்பற்ற ஜனதா தளம் இங்கு மிக வலுவிழந்த கட்சியாக இருப்பதால் இங்கே காங்கிரசோ, பாஜகவோ மாற்றாக அமையும்.

5.நாகாலாந்து மாநிலத்தில், ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் நாகாலாந்து மக்கள் முன்னணி

6.சிக்கிம் மாநிலத்தில் இருக்கிற சிக்கிம் சனநாயக முன்னணி

7.புதியதாக அமைந்த தெலுங்கானா மாநிலத்தில்  ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் தெலுங்கானா இராட்டிர சமிதி

8.பீகார் மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும்  ஐக்கிய ஜனதா தளம்

9.டெல்லியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் ஆம் ஆத்மி ஒரிசாவில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பிஜு ஜனதா தளம்

10.மேற்கு வங்காளத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் திரிணாமுல் காங்கிரசு

11.மிசோரம்மில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும்  மிசோ தேசிய முன்னணி

கர்நாடகாவில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் மதச்சார்பற்ற ஜனதா தளம் தவிர்த்து மீதி பத்து கட்சிகளும் இந்திய நடுவண் அரசில் யார் ஆட்சிப் பொறுப்பேற்பது என்பதை தீர்மானிக்கிற இடத்தில் உள்ளன. 

இதில் தீர்மானிக்கும் தலைவர்களாக முன்னிற்பவர்கள்: ஸ்டாலின், மம்தா பானர்ஜி, பினரயிவிஜயன், சந்திரபாபு நாயுடு, சந்திரசேகரராவ், ஜெகன் மோகன் ரெட்டி, மாயாவதி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் ஆவர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,160.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.