Show all

உறுதி படுத்தப்படாத குற்றச்சாட்டு! தடகளப் போட்டியில் தங்கம் வெற்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து அதிர்ச்சி.

ஒரு மாதம் கழிந்த நிலையில், தோஹா தடகளப் போட்டியின் போது எடுக்கப்பட்ட கோமதி மாரிமுத்துவின் சிறுநீர் மாதிரிகளை சோதனைகளுக்கு உட்படுத்திய போது, அதில் ஊக்க மருந்து அருந்தியதற்கான அறிகுறி காணப்பட்டதாக, ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டு பரபரப்புக் கிளப்பியுள்ளது. 

08,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கடந்த மாதம் தோஹாவின் நடைபெற்ற தடகளப் போட்டியில் தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்று அசத்தினார். 

ஒரு மாதம் கழிந்த நிலையில், தோஹா தடகளப் போட்டியின் போது எடுக்கப்பட்ட கோமதி மாரிமுத்துவின் சிறுநீர் மாதிரிகளை சோதனைகளுக்கு உட்படுத்திய போது, அதில் ஊக்க மருந்து அருந்தியதற்கான அறிகுறி காணப்பட்டதாக, ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளதாக அதிகாரமற்ற தகவல் வெளியாகி பரபரப்புக் கிளப்பியுள்ளது. 

இந்திய தடகள சம்மேளனத்தின் தலைவர் அடில்லே சுமாரிவல்லாவும் இது அதிகாரமற்ற தகவல் என்று உறுதி படுத்தியுள்ளார். 

இந்த செய்தி குறித்து கோமதி மாரிமுத்துவும் விளக்கம் அளித்த போது, இந்தக் குற்றச்சாட்டை தான் செய்தித்தாளில் பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து தடகள சம்மேளனம் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், இந்த தகவல் எங்கிருந்து பெறப்பட்டது, என்னிடம் ஏன் விளக்கம் கேட்கவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் கோமதி. 

இந்த வதந்தி ஏன்? சோதனை மாதிரி கையாளுவதில் தவறு நடந்து, அதை மறைக்க இந்த வதந்தி அரசியலா? வேறு ஏதாவது உள்நோக்கம் குறித்ததா? மருத்துவ சோதனை மூலம் கோமதி மாரிமுத்துவுக்கு ஊக்க மருந்து பழக்கம் இல்லை என்பதை நிரூபணம் செய்ய ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா? இந்திய தடகள சம்மேளனம் தெரிவிக்கும் அதிகாரப்பூர்வ தகவல் மூலம் தான் தெரிய வரும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,160.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.