Show all

இயற்கை கொடை! 45 செமீ ஆழத்தில் 48 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1.4 கிலோ தங்கத்தை தோண்டி எடுத்த ஆஸ்திரேலியாக்காரர்

ஆஸ்திரேலியாவின் மேற்குப்பகுதியிலுள்ள தங்க வயல் பகுதியில், நிறைய தங்க சுரங்கங்கள் உள்ளதால், ஆர்வமுடையவர்கள் தனிநபர்களாக கிழமையின் இறுதி நாட்களில் பொழுதுபோக்காக தங்கத்தை தேடுகின்றனர். இதையே முழுநேர பணியாக மேற்கொள்பவர்களும் இந்த பகுதியில் இருக்கின்றனர். ஆஸ்திரேலியாவில் இது சாத்தியம்.

08,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஆஸ்திரேலியாவில் கிடைக்கப்பெறும் நான்கில் மூன்று மடங்கு தங்கம் கல்கூர்லி எனும் பகுதியை சுற்றி எடுக்கப்படுகிறது.

ஆஸ்திரேலியாவின் மேற்குப்பகுதியிலுள்ள தங்க வயல் பகுதியில், நிறைய தங்க சுரங்கங்கள் உள்ளதால், ஆர்வமுடையவர்கள் தனிநபர்களாக கிழமையின் இறுதி நாட்களில் பொழுதுபோக்காக தங்கத்தை தேடுகின்றனர். இதையே முழுநேர பணியாக மேற்கொள்பவர்களும் இந்த பகுதியில் இருக்கின்றனர். சாதாரண உலோகம் கண்டுபிடிக்கும் கருவியை கொண்டு 1.4 கிலோ தங்கத்தை ஒருவர் தோண்டி எடுத்துள்ளார். 

ஆனால், இந்த பகுதியில் கிடைக்கும் பெரும்பாலான தங்கங்கள் 14 கிராமுக்கு குறைவு. ஆனால், அவை அடிக்கடி காணக் கிடைக்கின்றன. ஆனால் இந்த நபர் 1.4 கிலோ தங்கத்தை எடுத்தது அந்த நாட்டில் வெறுமனே கூடுதல் மகிழ்ச்சி மட்டுமே. ஆனால் உலக அளவில் இந்தச் செய்தி பரபரப்பு கிளப்பியுள்ளது.

தோண்டி எடுக்கப்பட்டுள்ள அந்த தங்க கட்டியின் புகைப்படத்தை உள்ளூரிலுள்ள கடை ஒன்று இணையதளத்தில் பதிவேற்றியுள்ளது. அந்த தங்க கட்டியின் சந்தை மதிப்பு சுமார் 48 லட்சம் ரூபாய் என்று தெரிகிறது.

அந்த தங்கக் கட்டியை கண்டுபிடித்தவர் தங்கத்தை தேடுவதை பொழுது போக்காக கொண்டவர் என்று அதன் புகைப்படத்தை இணையத்தில் பதிவேற்றியுள்ள கடையின் உரிமையாளர் மாட் குக் என்பவர் தெரிவிக்கிறார்.

தங்கத்தைத் தேடுபவர்களுக்கு தேவைப்படும் உபகரணங்களை விற்பனை செய்யும் கடையை நடத்தி வரும் குக், சம்பந்தப்பட்ட நபர் புதருக்கு அடியில் சுமார் 45 செமீ ஆழத்தில் இந்தத் தங்க கட்டியை கண்டறிந்ததாக கூறுகிறார். அந்த தங்க கட்டி பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும், அதன் எடை மிகவும் அதிகமாக இருந்தது.

உலகினருக்கு இது வியப்பாக இருக்கலாம்! எங்கள் நாட்டில் இந்தப் பகுதியில் சிறியளவிலான தங்கம் கிடைப்பது மிகவும் சாதாரணமானது என்று கூறுகிறார் ஆஸ்திரேலியாவிலுல்ள கர்டின் பல்கலைக்கழக பேராசிரியர் சாம் ஸ்பியரிங்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,160.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.