Show all

ஜெகன்மோகன் ரெட்டி தொடர்ந்து 6-வது நாளாக காலவரையற்ற உண்ணாவிரதம்.

ஆந்திர பிரதேசத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி  ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தொடர்ந்து 6-வது நாளாக காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.

இதையடுத்து, அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி குண்டூரில் காலவரையற்ற உண்ணாவிரதத்தைக் கடந்த புதன்கிழமை தொடங்கினார். இன்று 6-வது நாளாக உண்ணாவிரதம் நீடிக்கிறது. அவரது போராட்டத்துக்கு கம்யூனிஸ்டு, காங்கிரஸ் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

6-வது நாளாக காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும்  ஜெகன் மோகன் ரெட்டி உடலில் சர்க்கரை அளவு குறைந்து உள்ளதால் மிகவும் சோர்வாக காணப்பட்டு உள்ளார். இதனால் உண்ணா விரதத்தை கைவிடும்படி பலரும் கேட்டுக் கொண்டனர். ஜெகனின் மனைவி பாரதியும் போராட்டத்தை கைவிடும்படி கேட்டார். ஆனால் சிறப்பு அந்தஸ்து கிடைக்கும் வரை உண்ணாவிரதத்தை கைவிட மாட்டேன் என்று அவர் திட்டவட்டமாக கூறிவிட்டார்.

ஜெகன்மோகன் ரெட்டி கோரிக்கையை மாநில அரசு நிறைவேற்ற வேண்டும் என்று அவரது  ஆதரவாளர்கள் தெரிவித்தனர். ஜெகன்மோகன் ரெட்டி கோரிக்கையை மாநில அரசு நிறைவேற்றாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அவரது ஆதரவாளர்கள் எச்சரித்து உள்ளனர்.

மேலும் மாணவர் அமைப்புகள் ஆங்காங்கே மாநில அந்தஸ்து கோரி போராட்டம் நடத்தி வருவதால் ஆந்திர மாநிலத்தில் பதற்றமான சூழ்நிலை  நிலவி வருகிறது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.