Show all

இருநாட்டு (இந்தியா-பாகிஸ்தான்) மக்களும் அமைதி மற்றும் நம்பிக்கையை விரும்புகின்றனர். குர்ஷித்

பாகிஸ்தான் முன்னாள் மந்திரி குர்ஷித் முகமத் காசுரியின் புத்தக வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது.

புத்தக வெளியீட்டு விழாவில் பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு மந்திரி கசூரி கலந்து கொண்டார். அப்போது குர்ஷித் கசூரி எழுதிய புத்தகத்தை குல்கர்னி வெளியிட்டார்.

பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி குர்ஷித் எழுதிய,

'பாகிஸ்தான் வெளியுறவு கொள்கையில் எனது பார்வை, பருந்தோ, புறாவோ அல்ல”

என்ற ஆங்கிலப் புத்தக வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது. மும்பையில் ஏற்கனவே சிவசேனாவின் எதிர்ப்பை தொடர்ந்து பாகிஸ்தான் கஜல் பாடகர் குலாம் அலியின் இன்னிசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியின் புத்தகம் வெளியீட்டுக்கும் சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. நிகழ்ச்சியை நடத்த விடமாட்டோம் என்று சிவசேனா கூறியது.  

இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் மந்திரியின் புத்தகத்தை வெளியிட ஏற்பாடுசெய்து, குர்ஷித் முகமத் காசுரிக்கு அழைப்பு விடுத்த ஒ.ஆர்.எப். மும்பையின் தலைவரும்,

பாரதீய ஜனதா கட்சியின் தலைவருமான சுதீந்திரா குல்கர்னியின் மீது கருப்புமை வீசப்பட்டது.

இந்நிலையில் இதனை முடிவுக்கு கொண்டு வர மகராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

மேலும் மாநிலத்திற்கு வரும் முக்கிய பிரமுகர்களுக்கு தக்க பாதுகாப்பு தரப்படும் என்று அம்மாநில முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

விழாவில் கலந்துகொண்ட பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு மந்திரி கசூரி பேசியதாவது:

எல்லா பாகிஸ்தான் மக்களும் இந்திய மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்று சிவசேனா கட்சி புரிந்து கொள்ளவேண்டும். இரு நாட்டு (இந்தியா-பாகிஸ்தான்) மக்களும் அமைதி மற்றும் நம்பிக்கையை விரும்புகின்றனர்.  மேலும் எனக்கு சிறப்பான பாதுகாப்பு அளித்த மராட்டிய முதல்-மந்திரி பட்நாவிசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். எனக்கு அளித்த பாதுகாப்பு  மகிழ்ச்சி அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.