Show all

இது இந்திய அளவிலான தனித்துவம்! உலக அளவில் தமிழ்நாடு தனித்துவமானது என்பதற்கு பலஆயிரம் தரவுகள் கிடைக்கின்றன

ஒன்றிய அரசைவிட தமிழ்நாட்டின் பணவீக்க நிரக்கை குறைவாக இருப்பதில்- ஒன்றிய நிதிஅமைச்சர் ஒன்றும் புரிந்து கொள்ளாத நிலையில்- அதுவே தமிழ்நாட்டின் தனித்துவம் என்று அவருக்கு தெரிவிப்போம்! 
 
24,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: சில மாநிலங்களின் விலை உயர்வுக்கு ஒன்றிய அரசை குற்றம் சாட்டுவது நியாயமற்றது என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புலம்பியுள்ளார். 

அவரின் அந்தவகை புலம்பலுக்கு அவர் தொட்டுக்காட்டியது, எரிபொருள் வரியை குறைக்காத மாநிலங்களில்தாம் ஒன்றிய நிரக்கை (சராசரி) அளவை விடவும் அதிகமாகப் பணவீக்க அளவீட்டை பதிவு செய்யப்பட்டு வருகிறது, விலை உயர்வு விடையங்களைக் கையாளுவதில் ஒன்றிய-மாநில ஒத்துழைப்பு கட்டாயம் என்று நேற்று தெரிவித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். 


உலகளாவிய விலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு அண்மையில் நுகர்வோருக்கான பெட்ரோல் மீதான வரிகளை ஒன்றிய அரசு குறைத்திருந்தாலும், பல மாநிலங்கள் பெட்ரோல் டீசல் மீதான நிவாரணமும் வழங்கவில்லை இதனால் தத்தம் மாநிலத்தில் இருக்கும் மக்கள் விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டு வருவதாகக் கூறினார் நிர்மலா சீதாராமன். 

பொதுக் களத்தில் பரவலாகக் கிடைக்கும் தகவல்களைப் பார்த்தால் மாநிலத்திற்கு மாநிலம் பணவீக்கம் எவ்வாறு மாறுபடுகிறது என்பதைக் காட்டுகிறது. அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், 

எரிபொருள் விலையைக் குறைக்காத மாநிலங்களில் ஒன்றிய நிரக்கை பணவீக்கத்தை விட 14 மாநிலங்கள் மற்றும் மூன்று ஒன்றியப் பகுதிகளில் பணவீக்கம் அதிகமாக உள்ளது என்று சீதாராமன் கூறினார்.   

நடப்பு ஆண்டு தொடக்கத்தில் ஒன்றியத்தின் பணவீக்க நிரக்கை 6.8விழுக்காடாக மேலே குறிப்பிட்ட 14 மாநிலங்கள் மற்றும் மூன்று ஒன்றியப் பகுதிகளில், பெரும்பாலானவைகளின் பணவீக்க நிரக்கை 7விழுக்காட்டுக்கு அதிகமாக உள்ளன. 

தெலுங்கானா மாநில பணவீக்க நிரக்கை 8.32விழுக்காடு. மேற்கு வங்க மாநில பணவீக்க நிரக்கை 8.06 விழுக்காடு. சிக்கிம் 8விழுக்காடு இந்த 3 மாநிலங்களில் உள்ள மக்கள் அதிகமான பணவீக்கத்துடன் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று புலம்புகிறார் ஒன்றிய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன். 

மேலும் மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில பணவீக்க நிரக்கை 7.7விழுக்காடு. மத்திய பிரதேச மாநில பணவீக்க நிரக்கை 7.52விழுக்காடு. அஸ்ஸாம் மாநில பணவீக்க நிரக்கை 7.37விழுக்காடு. உத்தரப் பிரதேச மாநில பணவீக்க நிரக்கை 7.27விழுக்காடு. குஜராத் மாநில பணவீக்க நிரக்கை 7.2 விழுக்காடாக உள்ளது. 

ஒன்றிய அரசு பணவீக்கத்தை ஒன்றிய அரசால் மட்டுமே கையாள முடியாது, மாநிலங்கள் போதுமான நடவடிக்கைகளை எடுக்காத போது, இந்தியாவின் ஒரு பகுதி பணவீக்கத்தின் அழுத்தத்திலிருந்து தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. மாநிலங்கள் எப்படி அவர்களின் பணவீக்கத்தைக் கையாள்வது என்பதைப் புரிந்துகொள்வதற்குப் போதுமான தரவுகளும், வழிகளும் உள்ளன என்று சீதாராமன் பேசியுள்ளார். 

தமிழ்நாட்டின் தரவுகள் அரசு தரவுகள் படி வைகாசி,ஆனி மாத்தில் (ஜூன்2022) இந்தியாவின் பணவீக்கம் 7.01விழுக்காடாக இருந்த போது தமிழ்நாட்டின் பணவீக்கம் 5.08விழுக்காடாக இருந்தது. 

இதேபோல் ஆனி,ஆடி மாதத்தில் (ஜூலை2022) இந்தியாவின் பணவீக்கம் 6.71விழுக்காடக இருந்த போது தமிழ்நாட்டின் பணவீக்கம் 4.78விழுக்காடாக இருந்தது. 

ஒன்றிய அரசைவிட தமிழ்நாட்டின் பணவீக்க நிரக்கை குறைவாக இருப்பதில்- ஒன்றிய நிதிஅமைச்சர் ஒன்றும் புரிந்து கொள்ளாத நிலையில்- அதுவே தமிழ்நாட்டின் தனித்துவம் என்று அவருக்கு தெரிவிப்போம்! 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,366.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.