Show all

பிரிட்டன் நாட்டின் பேரரசி இரண்டாம் எலிசபெத் காலமானார்

உலகை கட்டி ஆண்ட ஐரோப்பிய நாடான பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத், தொன்னூற்று ஆறாம் அகவை நிகழும் காலத்தில் உடல் நலக்குறைவால் ஸ்காட்லாந்து நகரில் பால்மோல் கோட்டையில் ஓய்வெடுத்து வந்தார். 
 
24,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: பிரிட்டன் நாட்டின் பேரரசி இரண்டாம் எலிசபெத், அகவை முதிர்வு சார்ந்த உடல் நலக்குறைவால் நேற்று காலமானதாக அரண்மணை வட்டாரம் அறிவித்தது.

உலகை கட்டி ஆண்ட ஐரோப்பிய நாடான பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத், தொன்னூற்று ஆறாம் அகவை நிகழும் காலத்தில் உடல் நலக்குறைவால் ஸ்காட்லாந்து நகரில் பால்மோல் கோட்டையில் ஓய்வெடுத்து வந்தார். அகவை மூப்பால் உண்டாகும் உடல் நலக்கோளாறுகள் அரசிக்கு ஏற்பட்டுள்ளன. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததையடுத்து மருத்துவக் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

தகவலறிந்த அரசியின் மகனும் பிரிட்டன் இளவரசருமான சார்லஸ், அவரது மனைவி கமீலா உள்ளிட்ட அரசியின் குடும்பத்தினர் பால்மோல் கோட்டைக்கு வந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு இந்திய நேரப்படி 11:05 மணியளவில் காலமானதாக அரண்மணை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டாம் எலிசபெத், பிரிட்டனின் அரசியாகப் பொறுப்பை ஏற்று, 70 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். உலகிலேயே மிக நீண்ட காலம் அரசுப் பணியில் இருந்தோர் பட்டியலில், இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். பிரான்சின் பதினான்காம் லூயிஸ், 72 ஆண்டு, 110 நாட்கள் அரசராக இருந்து, சாதனைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசெபத் மறைவு குறித்து உலகத் தலைவர்ககள் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். இந்தியத் தலைமைஅமைச்சர் மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். ‛பிரிட்டன் அரசி நம் காலத்தில் வாழ்ந்த மிகுந்த மரியாதைக்கும், நம்பிக்கைக்கும் உரியவர். தனது நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் தலை சிறந்த அரசியாக பொறுப்பேற்றிருந்தார். பொது வாழ்க்கையில் கண்ணியத்தையும், நாகரீகத்தையும் கடைப்பிடித்து வந்தார். அவருடைய மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. அவருடைய குடும்பத்தாருக்கும் , இங்கிலாந்து நாட்டு மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிரேறன்' இவ்வாறு மோடி தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,366.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.