Show all

நினைத்துப் பார்க்கவே நடுக்கமாக இருக்கிறது! வாக்கு இயந்திரங்களில் முறைகேடு நடந்திருக்குமானல், பாஜக பயங்கர தீயசக்தியா!!

10,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்திய வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது குற்றஞ் சாட்டிய செய்தியாளர்கள் சந்திப்புக்கு பாஜக மற்றும் தேர்தல் ஆணையத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது என்று காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மென்பொருள் நிபுணர் சையத்சுஜா. அவர், நேற்று லண்டனரில் ஹேக்கத்தான் என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். மேலும், அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இந்தியாவைச் சேர்ந்த அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சையத்சுஜா, 'இந்தியாவின் வாக்குப் பதிவு எந்திரத்தை உருவாக்குவதில் நானும் பங்காற்றியுள்ளேன். கடந்த முறை பாஜக ஆட்சியைப் பிடித்த மக்களவைத் தேர்தலில் வாக்குப் பதிவு எந்திரத்தில் முறைகேடு நடைபெற்றது என்று தெரிவித்தார். 

அவருடைய பேச்சு பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும், அவர் சொல்வது உண்மையானால், துணிச்சலான இந்தச் செயலை மேற்கொண்;ட பாஜக எவ்வளவு பெரிய தீயசக்தி என்கிற பயத்தையும், ஏற்படுத்தியுள்ளது.

அந்த நிகழ்வில் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கலந்துகொண்டிருந்தார். கபில் சிபல் கலந்து கொண்டதற்கு பாஜக சிக்கிக் கொண்ட குற்றவாளி போல் கடுமையாகத் திமிறிது.

பாஜகவின் விமர்சனத்துக்கு பதிலளித்த கபில் சிபல், 'லண்டனில் நடந்த ஹேக்கத்தான் நிகழ்ச்சிக்கு பாஜக, மற்றும் தேர்தல் ஆணையத்துக்கும் அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது. சையத் சுஜா குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்படவேண்டும். தலையாயத்துவமான ஒரு விவகாரத்தின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு சரியோ தவறோ அதுகுறித்து விசாரணை நடத்தப்படவேண்டும். அவர் கூறிய குற்றச்சாட்டு தவறாக இருந்தால், அவர் மீது நடவடிக்கை எடுங்கள். அவர் கூறியது சரி என்றால், அம்மாடியோவ்! அது எவ்வளவு பெரிய துணிச்சலான உலகையே அச்சுறுத்தக் கூடிய செயல் என்று தெரிவித்தார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,041.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.