Show all

சாது மிரண்டால் காடு கொள்ளாது! பாஜக ஆட்சியின் பொருளாதார வீழ்ச்சி குறித்து, பாதிக்கப் பட்டவர்கள் பேசத் தொடங்கிவிட்டனர்.

அரசு இயந்திரங்கள் அனைத்தும் பாஜக நடுவண் அரசின் பிடியில் இருக்கிற அச்சத்தில், பாதிக்கப் பட்டவர்கள் அடங்கி ஒடுங்கி இருந்தது போய், சாதுமிரண்டால் காடு கொள்ளாது என்கிற பழமொழிக்கு ஒப்ப, பாதிப்பின் உச்சத்தைத் தொட்டவர்கள், இனி இழப்பதற்கு என்ன இருக்கிறது? என்ற துணிச்சலில் ஒவ்வொருவராக கருத்து சொல்லத் தொடங்கி விட்டார்கள். அதள பாதாளத்தில் இந்தியபொருளாதாரம்: 5 ரூபாய் பிஸ்கட் கூட விக்கல...

07,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஐந்து ரூபாய் பிஸ்கட் பாக்கெட் கூட இந்தியாவில் விற்பனை ஆகவில்லை என் பிரிட்டானியா நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. பொருளாதார மந்த நிலை இந்தியாவில் கவலை அளிக்கும் வகையில் மாறிக்கொண்டிருப்பதாக கருத்துக்கள் வலுத்து வருகிறது. பாதிப்பின் உச்சத்தைத் தொட்டவர்கள், இனி இழப்பதற்கு என்ன இருக்கிறது? என்ற துணிச்சலில் ஒவ்வொருவராக கருத்து சொல்லத் தொடங்கி விட்டார்கள்.
மக்கள் எல்லாருமே தேடிதேடி வாங்கி செலவழித்துக் கொண்டிருந்தார்கள். ஆடம்பரான செலவுகளும் தாரளமான இருந்தது. ஆனால் என்ன ஆச்சு என்றே தெரியவில்லை. தற்போது அப்படியே தலைகீழாய் மாறியுள்ளது. பொருளாதார மந்த நிலை மிகவும் கவலை அளிக்கிறது.

சில்லறை விற்பனை நாளுக்கு நாள் சரிய தொடங்கியது. 5 ரூபாய் பிஸ்கெட் பாக்கெட் கூட விற்பனை ஆகவில்லை என்று பிரிட்டானியா நிறுவனம் பொருளாதார மந்த நிலை குறித்து தனது கவலையை வெளிப்படுத்தி உள்ளது. பொதுமக்கள் வாங்குவதை குறைத்துக்கொள்ளத் தொடங்கியதால் துகில்துறையும் பாதிக்கப்பட்டுள்ளது. துணிகள் தேங்குவதாக தகவல்.

விதவிதமான நவீன அலங்காரத்தில் துணிகளை இறக்கிய துகில் அதிபர்கள் துணிகள் விற்பனை ஆகாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். நாடு முழுவதும் 30 நகரங்களில் 12லட்சத்து 28 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு விற்பனையாகாமல் தேங்கிகிடக்கிறது என்று மனை,வீடு விற்பனை துறை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

வங்கி சாராத நிதி நிறுவனங்களில் பண புழக்கம் குறைவாக இருப்பதால் கடும் பாதிப்பை ஏற்படுத்தலாம். மனை,வீடு விற்பனை துறையில் நிலவும் பாதிப்பு இரும்பு விற்பனையாளர்களையும் விட்டு வைக்கவில்லை.

டாடா ஸ்டீல் மற்றும் ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் போன்ற நிறுவனங்கள் சுமார் ரூ .100 லட்சம் கோடி உள்கட்டமைப்பு முதலீடுகளை வைக்க வேண்டிய சவால்களை சந்தித்து வருகின்றன. 

ஆட்டோ மொபைல்துறையில் மிகப்பெரிய சரிவு சொல்லவே வேண்டாம் கடந்த ஒரு மாதமாக ஊடகங்களில்  தலைப்பாகும் செய்தியே அதுதான். பல லட்சம் பேர் வேலைஇழக்கும் அபாயத்தில் உள்ளனர். வாகனங்கள் விற்பனை மந்தம் காரணமாக உற்பத்தி குறைத்துக்கொள்ளப் பட்டு வேலையும் பறிபோகும் நிலை உருவாகியுள்ளது.

மற்றொரு முதன்மைத் துறையான தொலைத்தொடர்பு துறையிலும் கடன்சுமை அதிகரிப்பால் வங்கிகளுக்கு வாராக்கடன் பட்டியலுக்கு செல்லக்கூடிய நிலையில் இருக்கிறார்கள். 

தற்போதைய இந்த சூழலுக்கு நடுவண் அரசும், கட்டுப்பாட்டு வங்கியும் அதன் இறுக்கமான பணகொள்கையும் காரணம் என பலரும் விமர்சிக்கிறார்கள். இதேபோல் சீனா – அமெரிக்கா இடையேயான வர்த்த போர், உலகலாவிய பொருளதார மந்த நிலை, கச்சா எண்ணெய் விலை, நாணயங்கள் மதிப்பு சரிவு போன்றவையும் காரணமாக சொல்லப்படுகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,254.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.