Show all

காஷ்மீரின் ஆளும் ஆளுநர் அரசின் பயமுறுத்தல்! வரவேண்டாம் காஷ்மீருக்கு: எதிர்க்கட்சிகளை நோக்கி

இன்று காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் இராகுல் அவர்கள் தலைமையில் எதிர்க்கட்சிகள் குழுவினர் காஷ்மீர் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரவேண்டாம் காஷ்மீருக்கு என்கிறது காஷ்மீர் ஆளுநர் அரசு.

07,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஆளுநர் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் அரசு நிர்வாகம் பயப்படுத்துகிறது. காஷ்மீருக்கு அரசியல் தலைவர்கள் வர வேண்டாமாம். 

ஜம்மு - காஷ்மீருக்கு கடந்த எழுபது ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த சிறப்புத்தகுதி அளித்த, 370வது பிரிவு அண்மையில் நீக்கியது பாஜக நடுவண் அரசு. மேலும்,
ஜம்மு - காஷ்மீர், லடாக் என, இரண்டு ஒன்றியப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டன. இந்நிலையில் இன்று காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் இராகுல் அவர்கள் தலைமையில் எதிர்க்கட்சிகள் குழுவினர் காஷ்மீர் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து காஷ்மீர் அரசு நிர்வாகம் தெரிவித்திருப்பதாவது: அரசில் கட்சி தலைவர்கள் சிறிநகர் வருவதை தவிர்க்க வேண்டும். காஷ்மீர் மக்களுக்கு தேவையற்ற அசௌகரியத்தை ஏற்படுத்தும். அவ்வாறு வருவது கட்டுபாடுகளை மீறுவதாக அமையும் என்பதால் தலைவர்கள் வருவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு காஷ்மீர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,254.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.