Show all

உலகின் மிகப் பெரிய வகையாக, சூரிய ஆற்றலைப் பயன்படுத்தும் திட்டம் தொடங்கியது! கருநாடகாவில்

18,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கர்நாடகாவில் உலகின் மிகப்பெரிய சூரிய சக்தி பூங்காவை முதல்வர் சித்தராமையா திறந்து வைத்தார்.

கர்நாடகாவில் தும்கரு மாவட்டம் பவகாடா என்ற பகுதியில் 13 ஆயிரம் ஏக்கர் பரபரப்பளவில் ரூ. 16,500 கோடி மதிப்பில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சூரிய சக்தி பூங்கா திட்டம் தொடங்;கி வைக்கப்பட்டது. கர்நாடகா மாநில சூரிய சக்தி மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் துவங்கப்பட்ட இப்பூங்காவை நேற்று முதல்வர் சித்தராமையா திறந்து வைத்தார். இப்பூங்கா உலகின் மிகப்பெரிய சூரிய சக்தி பூங்கா என கூறப்படுகிறது.

 

சித்தராமையா கூறுகையில், 5 கிராமங்களை உள்ளடக்கிய இத்திட்டத்திற்கு நிலம் அளித்த இப்பகுதியைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் விவசாய குடும்பங்கள் பயன்பெறும் என்றார்.

அதெல்லாம் சரி சித்தராமையா! உங்க பகுதி சூரிய ஒளியை மட்டுந்தானே பயன் படுத்துவீர்கள்! அத்து மீறி காவிரியில் இரண்டு அணைகளைக் கட்டிக் கொண்டது போல், முழுச்சூரிய ஒளியையும் நீங்களே பயன்படுத்தும் வகையில் ஏதாவது தொழில் நுட்பத்திற்கு முயற்சி செய்யவில்லையே!

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,714. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.