Show all

கிடைத்து விட்டது! ஹார்வார்டு பல்கலையில் தமிழ் இருக்கைக்கு போதிய நிதி

18,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: அமெரிக்காவில் ஹார்வார்டு பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கை அமைய போதுமான நிதி கிடைத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய ஹார்வார்டு பல்கலைகழக தமிழ் இருக்கை குழுமத்தின் தலைவர் விஜய் ஜானகிராமன் இத்தகவலை தெரிவித்தார். 362 ஆண்டுகள் பழமையான பல்கலைகழகம் ஹார்வர்டு. இதில் நமது தொன்மையான பழமையான மொழி தமிழ் அதை உலகளவில் பரவச் செய்யவே தமிழ் இருக்கை அமைக்கப்படுகிறது. 

ஹார்வார்டு பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கை அமைய 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து நிதியுதவி கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்., போதுமான நிதி கிடைத்துள்ள செய்தியை தமிழக அரசுடன் இணைந்து இன்னும் சில நாட்களில் அறிவிக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.

பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கை அமைய கொடுக்கப்பட்ட நிதி குறித்த அறிக்கை இன்னும் ஓரிரு நாளில் தமக்கு கிடைத்து விடும் என்ற அவர், கிட்டத்தட்ட தங்களுடைய இலக்கை அடைந்து விட்டோம் என எண்ணுகிறோம் என்றார். நிதி முழுவதும் சேர்ந்த பிறகு தமிழ் இருக்கைக்கான தலைவரை தேர்வு செய்யும் முறைகளை ஹார்வார்டு பல்கலைகழகமே அமைக்கும் என்றார். ஹார்வார்டு பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கை அமைய மதுரை காமராசர் பல்கலைகழக ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் தங்களின் ஒருநாள் ஊதியத்தை வழங்கினர். அப்போது தமது பங்களிப்பு நிதியாக ஒருமாத சம்பளத்தை தருவதாக மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் அறிவித்தார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,714. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.