Show all

இடைத் தேர்தல் தோல்விக்கான ஆதித்தியாநாத் காரணம்- ராகுல் காரணத்தை அங்கிகரிக்கிறதா

30,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் மற்றும் புல்பூர் மக்களவை தொகுதிகளுக்கு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இரு தொகுதிகளிலும் சமாஜ்வாதி வேட்பாளர்களே வெற்றி பெற்றனர். 

புல்பூர் தொகுதியில் சமாஜ்வாதி வேட்பாளர் நாகேந்திர பிரதாப் சிங் சுமார் 59,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 

இதேபோல் கோரக்பூர் தொகுதியிலும் சமாஜ்வாதி வேட்பாளர் பிரவீன்குமார் 21000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். 

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கோட்டையாக கூறப்படுவது கோரக்பூர். கோரக்பூர் தொகுதியில் இருந்து 5 முறை பாராளுமன்ற உறுப்பினராக ஆதித்யநாத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேச முதல்வரானதை அடுத்து தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து யோகி ஆதித்யநாத் விலகியதால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. 

உபி மற்றும் பிஹார் மாநில இடைத்தேர்தல் முடிவுகள், பாஜக மீதான மக்களின் கோபத்தை காட்டுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

இந்நிலையில் இரு தொகுதிகளிலும் படுதோல்வியடைந்தது குறித்து உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணியை குறைவாக மதிப்பிட்டதே தோல்விக்கு காரணம் என்று தெரிவித்துள்ளார்.

குறைவாக மதிப்பிடாமல் இருந்திருந்தால் என்ன செய்து வெற்றி பெற்றிருப்பார்! ஏதோ இடிக்கிறதே. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,726

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.