Show all

பாலியல் பாதிப்புகளுக்கு உடனே தண்டிப்பதுதான் சரியான தீர்வு! செல்பேசியில் சிலாகித்துக் கொண்டிருப்பது என்ன நாகரிகம்

30,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சின்னத்திரையும், சமூக வலைதளங்களும் தமிழ்;க் குடும்பங்களுக்குள்ளும், நுழைந்து விட்ட ஊடகங்கள். இன்றைய நிலையில், அவைகள் தமிழர் தம் அகப்பொருள் இலக்கண பாதுகாப்பு வட்டத்தில் இருந்து தமிழ்ப் பெண்களை வெளியில் இழுத்துப் போட்டு அசிங்கப் படுத்துவதற்கான கவர்ச்சி வலைவீசல்களை அரங்கேற்றி வருகின்றன. சின்னத்திரை படுத்தும் அசிங்கம் கொஞ்ச நஞ்சமல்ல. அடுத்தவள் கணவனை அபகரிப்பது எப்படி என்பதுதான் அனைத்து தொலைக் காட்சிகளின் அனைத்துப் படைப்புகளின் அடிப்படை கரு.

சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக, 'அசிங்கப் படுத்திக் கொள்கிறேன் என்னையும்' என்கிற போக்கில் 'சந்திப்புக்குறிமீடூ' என்பது உச்ச தலைப்பாகி கொச்சைப் பட்டு வருகிறது சமூக வலைதளம்.  

அகம் என்கிற ஓர் அழகியல், புறத்தில் வைத்து கீறி கிழிக்கப் பட்டு வருகிறது. 'அவன் என்னைப் பார்க்கிறான்' என்று ஒரு பெண் சொல்லத் தொடங்கும் போது, ஓரக்கண்ணால் பார்க்கும்;;;;;;;;; தோழி, விட்டேனா பார் என்று அவனைத் துரத்தும் அண்ணன், விடும்மா நான் பார்த்துக் கொள்கிறேன் எனும் தந்தை, நீ ஏண்டி அவனைப் பார்த்தே என்கிற தாய், அப்பாகிட்ட சொல்லிப் பார்த்துக்கலாண்டி தங்கை. இப்படித்தான் இருக்கும் நமது தமிழ்ச் சமூகத்தில் தப்பாக பார்க்கும் ஆடவர்களுக்கு எதிரான உடனடி முறையீடும், தீர்ப்பும். கண்டிப்பும், கண்டித்து மன்னிப்பு எல்லாம். 

'சந்திப்புக்குறிமீடூ' என்று சமூக வலைதளத்தில், பதிவிட்டு வரும்  இந்தப் பெண்களுக்கு தோழி, அண்ணன், தந்தை, தாய், தங்கை யாரும் இல்லை போலும். ஏன் உடனடியாக பெண் காவலர்கள், அறங்கூற்றுமன்றத்தைக் கூட அணுகலாமே? சமூக வலைதளப் பதிவு என்பதில் என்ன நியாயம் கிடைக்க முடியும். 

பாலியல் பாதிப்புகளுக்கு உடனே தண்டிப்பதுதான் சரியான தீர்வாக இருக்க முடியும். செல்பேசியில் சிலாகித்துக் கொண்டிருப்பது நாகரிகமாக இருக்க முடியாது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,942.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.