Show all

விற்பனையகத்தின் முன்பே, புதியதாக வாங்கிய பைக்கை தீயிட்டு எரித்தார்! சேவைத்தரக் குறைபாட்டால் கோபமடைந்த வாடிக்கையாளர்

31,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்த கோபி என்பவர் கடந்த 6 மாதத்திற்கு முன்பு அம்பத்தூரில் உள்ள காட்சியகம் ஒன்றில் டிவிஎஸ் விக்டர் என்ற இருசக்கர வாகனத்தை வாங்கியுள்ளார்.  வாகனம் வாங்கியதில் இருந்தே தொடர்ந்து பழுது ஏற்பட்டு வந்துள்ளதால், அதனை காட்சியகத்திற்கு கொண்டு சென்று சரி செய்து வருவதே வாடிக்கையாக இருந்துள்ளது.  இதனிடையே நேற்று வாகனத்தில் மீண்டும் பழுது ஏற்பட்டதால் அதனை மீண்டும் காட்சியகத்திற்கு கொண்டுசென்றுள்ளார். 

அப்போது காட்சியகத்தில் இருந்த ஊழியர்கள் கோபியை கிண்டல் செய்ததாக தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த கோபி காட்சியகம் முன்பு தனது வாகனத்திற்கு தீ வைத்தார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், கோபி மற்றும் காட்;சியக ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதற்குள் நிறைய பேர் தங்களும் வௌ;வேறு பொருள்கள் வாங்கிய வகையில் இவ்வாறு அவமானப் பட்டதாகவும், ஆனால் தாங்கள் பொருளைச் சேதப்படுத்த வில்லையென்றும், ஆனால் இந்த வாகன வாடிக்கையாளர் வாங்கிய பொருளை திருப்தியின்;;மையால் ஒட்டு மொத்தமாக அழிக்கும் முயற்சிக்குச் சென்றிருப்பது வேதனைதான் என்று பதிவிட்டு வருகிறார்கள். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,943.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.