Show all

கடந்த ஆறுகிழமை காலத்தில் மோடி கடந்து வந்த பாதை! காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து

15,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உச்ச

அறங்கூற்று மன்றம், மோடிஅரசுக்கு வழங்கிய, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு, இன்றுடன் முடிவடைகிறது. 

இதற்கிடையே, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து நடுவண் அரசுக்கான நெருக்குதலான பாராளுமன்ற முடக்கம், உழவர்கள் போராட்டம், அவைகளையெல்லாம் தாங்கிக் கொள்ள முடியாத தமிழிசை போன்ற பாஜக தொண்டர் அடிப் பொடிகளின், காலக்கெடு வரை பொறுத்திருக்க மாட்டீர்களா என்கிற கோபம், மனக்குமுறலின் உச்சமாக நவநீதக் கிருட்டிணனின் தற்கொலை முழக்கம், அது குறித்து பாஜக பெண்ரோபோ தமிழிசையின் கிண்டல், எதிர்கட்சியாக இருந்தாலும் எதிரிக் கட்சியாக காட்டிக் கொள்ளாது அது உணர்ச்சிகரமான பேச்சு என்கிற கனிமொழியின் பெருந்தன்மை, எடப்பாடியார் சொன்னது போல காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மோடியாரின் கடமை என்ற நிலையில், 

இந்தக் கடமையைச் செய்ய வேண்டிய மோடி இந்த ஆறு கிழமை காலத்தில் காவிரி மேலாண்மை வாரிய நடுவண் அரசின் கடமைக்காக என்ன செய்தார் என்று பார்த்தால், அறங்கூற்று மன்றத்தின் தீர்ப்பை ஆறுகிழமை காலமாக படித்து, படித்து, திரும்பத் திரும்பப் படித்து, அறங்கூற்று மன்றம் சிஸ்டம் என்று சொல்லியருப்பது வாரியமா? குழுவா? என்ற கேள்வியை நேற்று முன்வைத்திருக்கிறார். தூங்குகிறவனை எழுப்பலாம்ளூ தூங்குவது போல் நடிப்பவனை எழுப்ப முடியுமா?  

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,741.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.