Show all

மோடிஅரசு! வேண்டும் வேண்டும் என்பதை தராது; வேண்டாம் வேண்டாம் என்பதைத் திணிக்கும். அது எது?

15,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழக மக்கள் வேண்டும், வேண்டுமென கேட்கிற காவிரி நீருக்கு மேலாண்மை வாரியம்; அமைத்துக் கொடு என்று அறங்கூற்றுமன்றம் மோடி அரசுக்கு ஆணையிட்டு வழங்கிய கால அவகாசத்திற்கு இன்று கடைசி நாள். தமிழக மக்கள் வேண்டாம் வேண்டாம் என்று பலகாலம் பல்வேறு வகையாகப் போராடி ஓய்ந்து போய்,

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தற்போது, கிராம மக்களின் 'வீதி தொடர் போராட்டம்' இன்று 46-வது நாளாக நீடிக்கிறது. ஏராளமான ஆண்களும், பெண்களும் அங்குள்ள மரத்தடியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைந்துள்ளது. இந்த ஆலையில் இருந்து வெளியேறும் நச்சு புகை மற்றும் கழிவுகள் காரணமாக மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருவதாகவும், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு நிலத்தடி நீரும் மாசுபட்டுள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

இதனால் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக அ.குமரெட்டியாபுரம் கிராமத்தில் பொதுமக்கள் வீதி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஒரு வாரமாக பொதுமக்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

கடந்த கிழமை தூத்துக்குடியில் ஆயிரக்கணக்கானோர் திரண்ட பிரமாண்டமான கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. இதைத்தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். ஸ்டெர்லைட்டுக்கு எதிரான பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இதனிடையே அ.குமரெட்டியாபுரம் கிராமத்தில் பொதுமக்களின் வீதிதொடர் போராட்டம் இன்று 46-வது நாளாக நீடிக்கிறது. ஏராளமான ஆண்களும், பெண்களும் அங்குள்ள மரத்தடியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு அங்கேயே சமையல் செய்து உணவு வழங்கப்பட்டு வருகிறது.

போராட்டக்குழுவினர் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பியும், கோரிக்கைகள் அடங்கிய பதாகைகள் ஏந்தியும் தங்கள் எதிர்ப்பை காட்டி வருகிறார்கள். நேற்று இங்கு பெண்கள் கொளுத்தும் வெயிலில் முட்டி போட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிரான கல்லூரி மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. கடந்த 3 நாட்களாக கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் கல்லூரிகள் முன்பு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நேற்று மாலை மாணவர்கள் அங்குள்ள பூங்கா முன்பு போராட்டத்திற்கு வருவதாக வாட்ஸ்-அப் மூலம் தகவல் பரவியது. இதையடுத்து பூங்காவில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,741

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.