Show all

தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரைச் சாலை முழுவதும் நடுவண் அரசின் கட்டுப்பாட்டுக்குச் செல்லும் அபாயம்

03,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரைச் சாலை முழுவதும் நடுவண் அரசின் கட்டுப்பாட்டுக்குச் செல்கிறது. தமிழ்நாட்டில் ராணுவ கேந்திரமாக மாற்றப்படவுள்ள பல மாவட்டங்கள், நடுவண் அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்படும். இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களில் கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்திய கனிம வள சூறையை, எதிர்த்துப் போராடிய அப்பகுதி மக்களை இந்திய அரசு ராணுவம் கொண்டு ஒடுக்கியது. அதே நிலை தமிழ்நாட்டில் உருவாகும். தமிழ்நாட்டை ஆயுதக் கிடங்காக மாற்றிட நடுவண் திட்டம் என்பதை பேராசிரியர் ஜெயராமன் தோலுரித்துக் காட்டுகிறார்.

  தமிழ்நாட்டில் ஆயுதத் தொழிற்சாலைகள் மற்றும் ஆயுதக் கிடங்குகளை உருவாக்கவும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களுக்கு எதிராகப் போராடும் மக்களை ஒடுக்கவும் நடுவண் அரசு திட்டமிட்டுள்ளதாக மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்துப் பேசிய அவர் 'காவிரி, பாலாறு படுகைகளை சூறையாடி, இங்கேயே தொழிற்சாலைகளை அமைத்து, நவீன ஆயுதங்களை உற்பத்தி செய்யப் போகிறார்கள். கடற்கரைப் பகுதியில் புதிய துறைமுகங்களை அமைத்து அதன் வழியாக உலக நாடுகளுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்வார்கள். இதற்காக கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் காவிரி, பாலாறு படுகையை நடுவண் அரசு தாரை வார்க்கப் போகிறது. பெரும் ஆயுதக் கிடங்காக, தமிழ்நாட்டை நடுவண் அரசு மாற்றத் திட்டமிட்டுள்ளது. 

காவிரி சிக்கலில், மோடியே திரும்பிப் போ என்று உலகளவில் பேரேற்றம் செய்து விட்டோம் என்று நாம் மகிழ்ந்திருப்பதையே காரணமாக்கி கொஞ்சமும் வெட்கமில்லாமல், சத்தங் காட்டமல் வான்வெளியிலேயே வந்து, இராணுவ தளவாடங்கள் கண்காட்சி நடத்துவதற்கு தொடக்கமிட்ட மோடியின் நோக்கம் இதுதானோ! என்று நினைக்கும் போது நெஞ்சாங் குலையே நடுங்குகிறது. அப்படியானால் மோடியை கார்ப்பரேட் நெருக்கம் தன்செந்த நாட்டினர் மீதே இவ்வளவு பயங்கர நாசகார வன்கொடுமை நிகழ்த்துவதற்கான நெருக்கடிக்கு தள்ளி விட்டதோ. 

இப்படிதான் காங்கிரஸ் உலகவங்கிக்கு இந்தியாவைத் தரை வார்க்க, டங்கல் பொருளாதார திட்டத்தில் கையெழுத்திட்டு விழிபிதுங்கி நின்ற போது அவர்களை ஆட்சியை விட்டு அகற்றி கரையேற்றினோம். இப்போது பாஜகவை கரையேற்றவும், இந்தியாவைக் கார்ப்பரேட்டுகளிடம் இருந்து மீட்கவும் வரும் நாடளுமன்றத் தேர்தலில் பாஜகவை ஆட்சியிலிருந்து அப்பறப் படுத்த இப்போதே களமிறங்கினால்தான் உண்டு. மீண்டும் பாஜகவிற்கு ஆட்சியைக் கையளிப்பதும், கார்ப்பரேட்டுகளுக்கு இந்தியாவைக் கையளிப்பதும் வேறல்ல என்று அரசியல் நோக்கர்கள் எச்சரிக்கின்றனர். விழிப்போமா! விழிபிதுங்கி நிற்போமா? தீர்மானம் மக்கள் கையில். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,759.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.