Show all

பஞ்சாப்பிடம் போராடி தோல்வி அடைந்தது சென்னை: தோனி அதிரடி வீண்

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 11-வது சீசனின் 12-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மொகாலியில் நேற்று பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி பஞ்சாப் அணி சார்பில் தொடக்க வீரர்களாக லோகேஷ் ராகுல் மற்றும் கிறிஸ் கெயில் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் மிகவும் அதிரடியாக விளையாடி பஞ்சாப் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை தந்தனர். லோகேஷ் ராகுல் 37 ரன்களும் கிறிஸ் கெயில் 33 பந்துகளில் 63 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த வீரர்களும் அதிரடியாக விளையாடியதால் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 197 ரன்களை எடுத்தது. சென்னை அணி தரப்பில் தாகூர், இம்ரான் தாஹீர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி சார்பில் ஷேன் வாட்சன் மற்றும் முரளி விஜய் ஆகியோர் களமிறங்கினர். ஷேன் வாட்சன் 11 ரன்களும், முரளி விஜய் 12 ரன்களும் மற்றும் பில்லிங்ஸ் 9 ரன்களும் மட்டுமே எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.  இதையடுத்து ஜோடி சேர்ந்த தோனி மற்றும் ராயுடு சிறப்பாக விளையாட சென்னை வெற்றி பெரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. இறுதியாக கடைசி 6 பந்தில் 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் மிகவும் அற்புதமாக பந்து வீசிய மோகித் சர்மா 13 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வெற்றி பெற வைத்தார். பஞ்சாப் அணியின் தரப்பில் ஆன்ட்ரூ டை 2 விக்கெட்டுகளையும், மோகித் சர்மா மற்றும் அஸ்வின் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். கேப்டன் தோனி 44 பந்துகளில் 79 ரன்கள் எடுத்தும் வீண் ஆனது குறிப்பிடத்தக்கது. 

நேற்று மாலை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஐந்து மணிக்கு நடைபெற்ற மற்றொரு போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை 19 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது  குறிப்பிடத்தக்கது. 

2018 IPL Team Position
Rank TEAM M W L NRR Points
1 SRH 3 3 0 +0.772 6
2 KXIP 3 2 1 +0.116 4
3 CSK 3 2 1 +0.103 4
4 RR 3 2 1 -0.247 4
5 KKR 3 1 2 -0.051 2
6 RCB 3 1 2 -0.373 2
7 DD 3 1 1 -0.461 2
8 MI 3 0 3 -0.174 0

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.