Show all

நீட் தேர்வு அராஜகத்தின் உச்சம் கேரளாவில் மாணவியின் உள்ளாடையை அகற்றிய கொடூரம்

நீட் தேர்வு கெடுபிடியின் உச்சமாக கேரளா மாநிலத்தில் மாணவிகளின் உள்ளாடைகளை அகற்றிய பின்னரே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

     நாடு முழுவதும் நீட் எழுத்து தேர்வு இந்தியாவின் 103 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த 2 ஆயிரத்து 204 தேர்வு மையங்களில் நடைபெற்றது. 11 லட்சம் மாணவர்கள் எழுதினர். தமிழகத்தில் மட்டும் 85 ஆயிரம் பேர் எழுதினர்.

     தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் பேனா, பென்சில், ரப்பர், வெற்று அல்லது எழுதிய காகிதங்கள், புத்தகம், பேனா பவுச், லாக் டேபிள், எலக்ட்ரானிக் பென், கால்குலேட்டர், செல்போன், பேஜர், இயர்போன், தொப்பி, கைப்பை, தோள்பை ஆகிய எதையும் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது.

     அதிகப்படியான சோதனை நடவடிக்கையால் தேர்வு எழுதும் மையங்களில் பரபரப்பாக காணப்பட்டது. பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்தச் சோதனையால் தேர்வு எழுதும் மையங்களில் மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களுக்கும் சோதனை செய்பவர்களுக்கும் இடையே பல இடங்களில் சர்ச்சை ஏற்பட்டது.

     தோடு, ஹேர்ப்பின், ஆகியவற்றை அகற்றிய பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். மாணவர்களின் முழு கை சட்டைகள் அரை கை சட்டையாக்கப்பட்டது. இதுவே சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் கேரளாவில் கண்ணனூரில் உள்ளாடைகளை அகற்றிய பின்னரே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இதனால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.

     தேர்வு எழுதும் அறைக்கு சென்ற மாணவிகள், திரும்ப வந்து உள்ளாடைகளை அளித்து விட்டு சென்றதாக ஊடகங்களில் பேட்டியளித்த பெற்றோர்கள் கூறினர். உள்ளாடைகளை அகற்றிவிட்டு தேர்வு எழுதியதால் பெற்றோர்களும், மாணவர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.