Show all

உச்சநீதிமன்ற நீதிஅரசர்கள் 8 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை நீதிஅரசர் கர்ணன் ஆணை

உச்சநீதிமன்ற தலைமை நீதிஅரசர் உள்பட உச்சநீதிமன்ற நீதிஅரசர்கள் 8 பேருக்கு 5 ஆண்டுகள் கடுமையான சிறை தண்டனை விதித்து கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிஅரசர் கர்ணன் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை வன்கொடுமைச் தடுப்புச் சட்டத்தின் கீழ் பிறப்பித்துள்ளதாகவும் நீதிஅரசர் கர்ணன் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

     தமிழகத்தைச் சேர்ந்த சி.எஸ். கர்ணன் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிஅரசராக உள்ளார். இவர், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிஅரசராக இருந்த சஞ்சய் கிஷன் கவுல் உள்ளிட்ட பல நீதிஅரசர்கள் மீது ஊழல் புகார் கூறியதைத் தொடர்ந்து,

உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறது.

     நீதிஅரசர்களுக்கு எதிராக ஊழல் புகார் கூறியதற்காக உச்சநீதிமன்றத்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு உள்ளாக்கி நீதிஅரசர் கர்ணனுக்கு மனநல பரிசோதனை செய்ய உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதற்கு நீதிஅரசர் கர்ணன் கடும் கண்டனம் தெரிவித்தார்.  இதற்கு பதிலடி நடவடிக்கையாக அவர் ஒரு உத்தரவை பிறப்பித்தார்.

     அதில், உச்சநீதிமன்ற நீதிஅரசர்கள் 7 பேருக்குத்தான் மன நல பரிசோதனை செய்ய வேண்டும். எய்ம்ஸ் மன நல மருத்துவர்கள் கொண்ட குழு இந்த சோதனை நடத்த வேண்டும். என அந்த உத்தரவில் கூறியுள்ளார்.

     மேலும் இந்த உத்தரவை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பிறப்பிக்கிறேன் என்றும் அவர் கூறியிருந்தார்.

     இந்நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிஅரசர் உள்பட உச்சநீதிமன்ற நீதிஅரசர்கள் 8 பேருக்கு 5 ஆண்டுகள் கடுமையான சிறை தண்டனை விதித்து கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிஅரசர் கர்ணன் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை வன்கொடுமைச் தடுப்புச் சட்டத்தின் கீழ் பிறப்பித்துள்ளதாகவும் நீதிஅரசர் கர்ணன் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.