Show all

நீட் தேர்வு நடந்தது

நாடு முழுவதும் இன்று மருத்துவ படிப்பில் சேர்வதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வான நீட் தேர்வு நடந்தது. தேர்வு அறைக்குள் நுழையும் முன்பு பல்வேறு சோதனைகளைத் தாண்டி செல்வதற்குள் போதும், போதும் என வெறுத்து போய் விட்டனர்.

     பைஜாமா, குர்தா, பர்தா, புடவை, வளையல், மூக்குத்தி, முழுக்கை சட்டை, ஜீன்ஸ், ஷூ கைவளையம் என அணிய கூடாது என தடை போட்டனர்.

     ஏற்கனவே அறிவித்தபடி பெண்கள் உரிய ஆடைகள் அணிந்து வந்தாலும் சிலர் சிலவற்றை தவிர்க்காமல் வந்திருந்தனர். முழுக்கை சட்டை போட்டவர்கள் சட்டை கையை அரையாக கிழித்து கொண்ட பின்னரே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் தேர்வு அறைக்கு வெளியே நடந்த சோதனை படு பயங்கரமாக இருந்தது. இது போன்ற செயல்கள் தங்களுக்கு மன அழுத்தம் தருவதாக வருத்தப்பட்டனர்.

     தேர்வு முடித்து வெளியே வந்த மாணவர்கள் தேர்வு வினாக்கள் மிகவும் கடினமாக இருந்ததாகவும், இதனால் அதிக மதிப்பெண்கள் பெறுவது கடினம் எனவும் பல மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.