Show all

சட்டமன்றக் கூட்டத்துக்கு வெடிகுண்டுடன் வந்து பரபரப்பை ஏற்படுத்தினார் சட்டமன்ற உறுப்பினர்! இது கேரளாவில்

24,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கேரளா மாநிலத்தின் சட்டமன்ற  வரவு-செலவு கூட்டத்தொடர் நேற்று கூடியது. அப்போது எதிர்க்கட்சி வரிசையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் உட்கார்ந்திருந்தார்.

அவர் திடீரென எழுந்து நின்று, தான் கையில் வைத்திருந்த வெடிக்காத குண்டை பேரவைத் தலைவரிடம் காட்டினார். இதனால் சட்டமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

கடந்த மாதம் கண்ணூரில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அப்போது காவல்துறையினர் காங்கிரசார் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இவை இரண்டும் வெடிக்காத குண்டுகள். மாநிலத்தில் காவல்துறையினரின் அராஜகம் அதிகரித்து வருகிறது என்றார்.

இதைக்கேட்டதும் முதல்வர் பினராயி விஜயன் கடும் கோபமடைந்தார். சட்டமன்றத்திற்;குள் வெடிபொருள், ஆயுதம் கொண்டு வர சட்டத்தில் இடமில்லை என்றார்.

இவரது இந்த செயலுக்கு ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பேரவை விதிகளை மீறி சட்டமன்றத்திற்குள் வெடிகுண்டை கொண்டு வந்த காங்கிரஸ் சட்டமன்றஉறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பேரவைத் தலைவரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்றஉறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, பேரவைத் தலைவர் கூறுகையில் விதிகளுக்கு முரணாக இதுபோல் நடந்துகொண்டது தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,720.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.