Show all

கேரள அமைச்சரின் சீன பயணம் தேசிய நலனுக்கானது இல்லையாம்

04,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கேரள அமைச்சரின் சீன பயணம் தேசிய நலனுக்கானது இல்லை என்பதால் அது மறுக்கப்பட்டதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 26-31,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5119 (11.09.2017-16.09.2017) சீனாவின் செங்டு நகரில் ஐக்கிய நாடுகள் அவையின் உலக சுற்றுலா அமைப்பு பொது அவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க கேரள சுற்றுலாத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் செல்வதாக இருந்தது.

ஆனால், அவருக்கு அந்த அனுமதியை வழங்க நடுவண் வெளியுறவுத்துறை மறுத்துவிட்டது. இதனால் அதிருப்தியடைந்த கேரள முதல்வர் பினராயி விஜயன், இந்தச் சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில், கொச்சியை சேர்ந்த வழக்கறிஞர் பினு என்பவர் தகவல்உரிமைச் சட்டத்தின்கீழ், இதுதொடர்பாக கேள்வி கேட்டிருந்தார். அதற்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது.

அந்த பதிலில், கேரள அமைச்சரின் சீன பயணம், இந்திய நலனுக்கு உகந்ததாக இல்லை என்பதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-இந்தியாவின் பெருஊடகங்கள் மட்டும் இல்லாமல், ஒட்டு மொத்த நிருவாகமுமா, பாஜகவின் விருப்பத்திற்காக செயல்படுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.