Show all

ராகுலை பச்சைப் பிள்ளை என்ற பாஜக தேர்தல் விளம்பர நையாண்டிக்கு தேர்தல் ஆணையம் தடை

30,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலை இழிவாக சித்தரிக்கும் வகையில் பாஜக தயாரித்துள்ள விளம்பரத்துக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

குஜராத்தில் அடுத்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக சார்பில் மின்னணு விளம்பரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதற்கு குஜராத் தலைமை தேர்தல் அதிகாரியின் கட்டுப்பாட்டில் உள்ள ஊடக குழுவிடம் கடந்த மாதம் அனுமதி கோரப்பட்டது. பாஜக கொடுத்த விளம்பரத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலை இழிவாக சித்தரிக்கும் விதமாக ‘பப்பு (பச்சைப் பிள்ளை) என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சொல்லுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஊடகக் குழு, விளம்பரத்தை வெளியிட தடை விதித்தது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,608

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.